துயரம் தான் வருமா? எல்லோருள்ளும் அமைதி வந்துவிட்டால் உலகில் யுத்தம் வருமா? அழும் சத்தம் தான் வருமா? உலக சமாதானம் தானே எங்கும் நிலவும் சமாதானத்தை உருவாக்க எல்லோரையும் நல்லோராக்கும் எண்ணம் உன்னில் தோன்றிடவே என் கருத்தை அவைமுன் தொடங்குகிறேன்
உலக அமைதி (World Peace)
அனைத்து நாடுகளிலும் வாழ்கின்ற மக்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்து அரசியல் சுதந்திரம், அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்கின்ற இலட்சியத்தைக் குறிக்கிறது. உலகத்தில் வன்முறையும் போரும் மறைந்து, மக்கள் மனதார ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து, அமைதியை வளர்க்கின்ற அமைப்புகளை உருவாக்குவதும் உலக அமைதி என்னும் இலட்சியத்தில் அடங்கும்.
கடவுள் மதம் ஜாதீயம் தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக, தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் உயர் நிலையில் உள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இவை புகுத்தப்பட வேண்டிய அவசியமும் காரணமும் என்னவென்று பார்த்தால், அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அந்நியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்.
அன்பர்களே முடிவாக ஒன்று கூறுகிறேன். சரீரத்தினால் நெற்றி வியர்வை சொட்ட கஷ்டப்படும் மக்களைப் பாருங்கள். அவர்களுக்கு கல்வி, மனிதத்தன்மை மானம் இல்லாமல், செத்திருப்பதையும் பாருங்கள். வேலையில்லாமல் திண்டாடும் மக்களையும் அவர்களது பெண்டு பிள்ளைகளின் பட்டினியையும், கொடுமையையும் பாருங்கள். வீடுவாசல் இல்லாமல் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்து கொண்டு கஞ்சிக்கு ஊர் ஊராய்த் திரியும் கூலி மக்களைப் பாருங்கள். இவ்வித மக்கள் உலகில் எங்கெங்கு யார் யாரால் கஷ்டப்படுத்தப் படுகிறார்கள் என்பதையும் பாருங்கள் உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஸ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிகள், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகுபாடுகளை இடித்துத் தள்ளித் தரைமட்டமாக்குங்கள். அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாததாகிய மனித சமூகம் சமஉரிமை - சமநிலை என்கிற கட்டடத்தைக் கட்டுங்கள். இதைச் செய்ய நீங்கள் உலகத்திலுள்ள கஷ்டப்படும் எல்லா மக்களுடனும் ஜாதி, மதம், தேசம் என்கிற வித்தியாசம் இல்லாமல் பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள். அப்போது நீங்கள் கண்டிப்பாய் வெற்றி அடைவீர்கள்.
யுனெஸ்கோவின் முகவுரை வாசகம் கூறுவதும் அதையே "மனித உள்ளங்களில் போர் தோன்றுவதனால் மனித உள்ளங்களில் தான் அமைதிக்கான அரண்களும் அமைக்கப்பெறல் வேண்டும்." என்பதாகும். எல்லாவிதமான யுத்தங்களுக்கும் வன்முறைகளுக்கும் அடிப்படையாக அமைவது மனித மனங்களில் அமைதியின்மையும் சக மனிதனை சக மனிதனாக மதிக்காமையும் ஆகும். எந்த சமயத்திலும் பண்பாட்டிலும் இவ்வாறான கூற்றுக்கள் கூறப்படவில்லை. மனிதனே அவனுக்குள்ளே இவ்வாறான எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு அமைதியாக தெளிவாக இருக்கும் தண்ணீரில் கல்லெரிவது போல சமூகத்திலும் நாட்டிலும் வன்முறைகளை ஏற்படுத்தி கொள்கின்றான். இவ்வாறு வன்முறைகள் யுத்தங்கள் ஏற்படுவதனால் எவ்வித பயனும் இல்லை. பிஞ்சு குழந்தைகள் பெற்றோரை இழப்பதும் உறவுகளை இழப்பதும் உயிர்களை இழப்பதுமே தோன்றும்.
அன்பர்களே உங்களில் மாற்றங்களை ஏற்படுத்துங்கள். மனங்களில் உள்ள அழுக்கான எண்ணங்களை தகர்த்தெறியுங்கள் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அவனுக்கான இறுதி நாளை அடைவது நிச்சயமே அதற்கிடையில் இருக்கும் இவ்வாழ்வை மன அமைதியுடனும் மனிதாபிமானத்துடனும் எல்லோரையும் சமனாக மதித்து சமாதானமான ஒரு உலகை கட்டியெழுப்புங்கள்.
நாளை மாறும் என்று எண்ணி நாட்களை கடத்திடாமல் உன்னில் மாற்றத்தை ஏற்படுத்து உலகம் தன்னால் மாறிடும். சுயநலமாக சிந்திக்காமல் சக மனிதனுடன் இணைந்து மாற்றத்தை புனைந்திடு வாழ்வும் அழகாகும் நாடும் அமைதிக்கொள்ளும்.
"சமத்துவம் சாத்தியமாவது உன் உள்ளதாலே அன்றி வேறு எந்த விதத்திலும் அதை ஏற்படுத்த முடியாது " எனக் கூறி விடைபெறும் நான் அழகராஜ் சுதர்ஷினி.
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக