அல் ஹூதா இல்ல விளையாட்டுப் போட்டியில் அறபா இல்லம் வெற்றி

மாத்தறை மாவட்ட ஹொரகொட மாறை/அல் ஹுதா முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டித் தொடரில் அறபா இல்லம் வெற்றி பெற்றது.

அல் ஹுதா முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் கடந்த 2025.02.03,05 ஆகிய இரு தினங்களும் அதிபர் எம். என். எம் நிஸ்தார் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக தென் மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் மஸாஹிர் ஸேர் அவர்கள் கலந்து கொண்டார்.

அரபா மற்றும் மினா இல்லங்களுக்கு இடையிலான போட்டியில் 311 புள்ளிகளை பெற்று மினா இல்லம் இரண்டாம் இடத்தையும், 58 மேலதிக புள்ளிகளுடன் 369 புள்ளிகளை பெற்று அறபா இல்லம் வெற்றியையும் சுவீகரித்துக் கொண்டது. மேலும் இப்போட்டித் தொடரில் விநோத உடைப் போட்டி மற்றும் உடற்பயிற்சி கண்காட்சி என்பனவும் இடம் பெற்றது.

பாடசாலை விளையாட்டுக் குழு ஏற்பாடு செய்திருந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் பாடசாலை ஆசிரியர்கள், இல்லப் பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், தனவந்தர்கள் உட்பட பிரதேச பிரமுகர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

[smartslider3 slider="33"]

கருத்துகள்