2026 ஆம் ஆண்டு வெளியாகிய பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல்படி 16 அமைப்புகள் உட்பட 206 தனிநபர்கள் அப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் 2012 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதிகளின் 4(7) ஆம் ஒழுங்கு விதியின் கீழ் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட ஆட்கள், குழுக்கள் மற்றும் உருவகங்களின் பட்டியலுக்கான திருத்தம் காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டதும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆந் திகதிய 2438/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பட்டியலுக்கான திருத்தத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறானதுமான 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆந் திகதிய 1854/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் குறித்து நியமிக்கப்பட்ட ஆட்கள் குழுக்கள் மற்றும் உருவகங்களின் பட்டியலானது அதற்கான அட்டவணைகளை நீக்குவதன் மூலமும் அவற்றுக்குப் பதிலாக பின்வரும் அட்டவணைகளை இடுவதன் மூலமும் திருத்ப்பட்டுள்ளது.
- என். டீ. ஜே எனவும் அறியப்படும் தேசிய தௌஹித் ஜமாத்
- ஜே. எம். ஐ எனவும் அறியப்படும் ஜமாதே மிலாதே ஈப்ராஹிம்
- டபிள்யூ. ஏ. எஸ் எனவும் அறியப்படும் விலயாத் அஸ் செயிலானி
- எஸ். எல். ஐ. எஸ். எம் என்றும் அறியப்படுகின்ற இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம்
- சுப்பர் முஸ்லிம் என அறியப்படும் சஹாபி தரிக்கா
- சேவ் த பேர்ள்ஸ்
- டருள் ஆதர் அத்தபவியா
- டி. வை. ஓ என்றும் அறியப்படுகின்ற தமிழ் இளைஞர் அமைப்பு
- க. த. தே. அ என்றும் அறியப்படுகின்ற கனேடிய தமிழர் தேசிய அவை
- தமிழ்ப்புலிகள் என்றும் எல். ரீ. ரீ. ஈ என்றும் அறியப்படுகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள்
- TRO என்று அறியப்படுகின்ற தமிழர் புனர்வாழ்வு அமைப்பு
- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என அறியப்படுகின்ற டீ.சீ.சீ பிரான்ஸ்
- உலக தமிழர் இயக்கம் என அறியப்படுகின்ற டப். டீ. எம்
- நாடு கடந்த தமிழீழ அரசு என்றும் அறியப்படுகின்ற டீ. ஜீ. டீ. ஈ
- டபிள்யூ. டீ. ஆர். எப் என்றும் அறியப்படுகின்ற உலக தமிழர் நிவாரண நிதியம்
- எச் கியூ என்றும் அறியப்படுகின்ற தலைமையகக் குழு
Ibnuasad
கருத்துகள்
கருத்துரையிடுக