ஓர் வருடப் பணி - அனுபவத்தை
ஓர் ஆயிரமாய் தரும் பணி
கல்வியே ஒளி விளக்காகி
கல்விப் பணியே வாழ்வின் தீபமாகி
பள்ளிப் பாடங்களை பக்குவமாய் வடிவமைத்து பள்ளிச் சிட்டுக்களின் மனதில் பதிந்த பஸ்ல் ஆசான் நீர்!
தெவிட்டும் கணிதத்தையும் தெளிவால் எளிதாக்கி தெனியாய வலயத்தில் தென்றலாய் வீசும் நீர்!
உற்சாகத்தால் உரமூட்டி உயர் குணத்தால் வழிகாட்டி உம் ஆசிரியப் பணியில் உஸைன் ஸேராய் சுழல்கிறீரே!
களைத்தாலும் புன்னகை சளைத்தால் எள்ளி நகை கடமை தவறாத வாலிபனாய் சமுதாயத்தின் முதுகெலும்பாய்!
அறப்பணியதை அல்லும் பகலுமாய் வல்லோன் துணையுடன் பல்லாண்டு சேவையாற்ற பிரார்த்திக்கும் இவள் உம் அன்பு மனையாள்...


கருத்துகள்
கருத்துரையிடுக