உங்கள் கைப்பேசியை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? இல்லை, அது உங்களைப் பயன்படுத்துகிறதா?
டிஜிட்டல் டயட் (Digital Diet) பற்றி உங்களுக்குத் தெரியுமா?
இன்றைய உலகில் மொபைல் போன், சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் நமது அன்றாட வாழ்க்கையின் பிரிக்க முடியாத பகுதியாகிவிட்டன. ஆனால், எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு தீங்கு விளைவிப்பது போல, டிஜிட்டல் பயன்பாடும் அளவை மீறும்போது மனநலத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இதற்கான விழிப்புணர்வான அணுகுமுறையே டிஜிட்டல் டயட் (Digital Diet).
உளவியல் ரீதியாக, மனித மூளை புதுமை (Novelty), பாராட்டு (Reward), சமூக அங்கீகாரம் (Social Validation) போன்றவற்றை விரும்பும் வகையில் இயங்குகிறது. ஒவ்வொரு Notification, Like, Comment, அல்லது புதிய வீடியோவும் மூளையில் டோபமின் (Dopamine) என்ற நரம்பு வேதிப்பொருளை தூண்டுகிறது.
இது தற்காலிக மகிழ்ச்சியை அளித்தாலும், தொடர்ந்து இதே தூண்டுதலை எதிர்பார்க்கும் பழக்கத்தை உருவாக்குகிறது.
இதுவே Behavioural Addiction (நடத்தை சார்ந்த அடிமைத்தனம்) உருவாகும் அடிப்படை.
அதிகப்படியான Screen Time காரணமாக,
- கவனச் சிதறல் (Attention Deficit)
- நினைவாற்றல் குறைவு (Reduced Working Memory)
- மனஅழுத்தம் (Stress)
- பதட்டம் (Anxiety)
- மனச்சோர்வு (Depression)
- தூக்கக் கோளாறு (Sleep Disturbance)
- உணர்ச்சி கட்டுப்பாட்டில் சிரமம் (Emotional Dysregulation)
போன்ற பல உளவியல் சிக்கல்கள் ஏற்படலாம்.
சமூக வலைத்தளங்களில் பிறரின் வாழ்க்கையை தொடர்ந்து ஒப்பிட்டு பார்ப்பது Social Comparison Theory-க்கு ஏற்ப,
- தன்னம்பிக்கை குறைவு (Low Self-esteem)
- வாழ்க்கை திருப்தியின்மை (Life Dissatisfaction)
- நான் போதுமானவன் அல்ல
என்ற எதிர்மறை சிந்தனைகளை உருவாக்கும்.
மாறாக, Digital Diet என்பது தொழில்நுட்பத்தை விட்டு முழுமையாக விலகுவது அல்ல; Mindful Technology Use-ஐ வளர்ப்பதாகும்.
அதாவது, எப்போது, எவ்வளவு நேரம், எந்த நோக்கத்திற்காக டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம் என்பதை உணர்வுடன் கட்டுப்படுத்துவது.
உளவியலாளர்கள் பரிந்துரைக்கும் சில நடைமுறைகள்:
காலை எழுந்தது முதல் 30–60 நிமிடங்கள் மொபைலைத் தவிர்க்கவும்.
தேவையற்ற Notifications-ஐ அணைக்கவும்.
Screen Time-க்கு தினசரி வரம்பு அமைக்கவும்.
குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் "Phone-Free Time" கடைப்பிடிக்கவும்.
தினமும் குறைந்தது 30–60 நிமிடங்கள் Offline செயல்பாடுகளில் (வாசிப்பு, உடற்பயிற்சி, தியானம், இயற்கை நடை) ஈடுபடவும்.
உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தவும்.
முடிவாக,
மொபைலை விட்டு விலகுவதுதான் Digital Diet அல்ல; மொபைல் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தாமல், நீங்கள் அதைப் பொறுப்புடன் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதே உண்மையான Digital Diet.
"தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்; அதற்கு அடிமையாகாதீர்கள். மன அமைதியை பாதுகாப்பதே சிறந்த டிஜிட்டல் பழக்கம்."

கருத்துகள்
கருத்துரையிடுக