அகிலத்திற்கோர் அருட்கொடை

அகிலத்திற்கோர் அருட்கொடை, Youth Ceylon



அகிலத்திற்கோர் அருட்கொடையாய்
அவனியில் அவதரித்தீரே!
மனிதருள் மாணிக்கமாய்
மண்ணில் மலர்ந்தீரே!
மக்கத்து மண்ணிலே
மலராய் பூத்திரே!

பிறக்கும் முன்னே பிதாவை இழந்தீரே!
ஈர்மூன்றாண்டிலே அன்னையை பிரிந்தீரே!
உம்மிநபியாய் இருந்தபோதும்
உம்மத்திற்காய் வழிகாட்டினீரே!

தாயிப் மக்கள்
தகாத வார்த்தைகளால் திட்டியபோதும்
தாங்கிக் கொண்டீரே!
கல்நெஞ்சங்கொண்டோர் கொடுத்த
கல்லடியையும் சொல்லடியையும்
கலங்காது எதிர்கொண்டிரே!

இஸ்லாத்தின் உயிர்ப்புக்காய்
இருபத்துமூன்றாண்டுகள்
இளமையுடன் செயற்பட்டீரே!
இறுதிவரை உறுதியுடன்
இஸ்லாத்திற்காய் உழைத்தீரே!

அயராது அகிம்சையுடன் செயற்பட்டு
அறுபத்து மூன்றாம் வயதில்
இறையழைப்பை ஏற்றீரே!
நீர் காட்டிய நேரிய வழியில்
நாமும் பயணிக்க
இறைவன் அருள் புரிவானாக!

Farisa Asad

கருத்துகள்