மறுமை

மனிதனும் ஈசலாய் சிதறிடும்

மலையும் பஞ்சாய் பறந்திடும்

மறுமையும் அருகில் வந்திடும்

உங்கள் செயல்கள் நின்டிடும்

செய்ததை நீங்களே பார்த்திடும்

அதுவே தீர்ப்பு நாளாகிடும்

செயலில் நன்மை கனத்திடும்

போது வலக்கரத்தில் கிடைத்திடும்

அதுவே சுவனமாய் அமைந்திடும்

செயலில் தீங்கு நிறைந்திடும்

போதே இடக்கரத்தில் கிடைத்திடும்

அதுவே நரகமாய் அமைந்திடும்

குர்ஆனை வாழ்வாய் அமைத்திடும்

வாழ்வும் நன்றாய் அமைந்திடும்

மறுமையில் சுவனமும் நிரந்தரம்

Ibnu Asad

கருத்துகள்