இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, மதவாத செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளமையானது முஸ்லிம் சமூகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் மூன்று பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் உட்பட முஸ்லிம்களுக்கு எதிரான 15கும் மேற்பட்ட முக்கிய சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என முஸ்லிம்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் நாட்டில் இனவாத கருத்துக்களைப் பரப்பிய பொது பல சேனா மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புகளின் செயற்பாடுகள் மீண்டும் வீரியம் பெற்றுள்ளதுடன் ஞானசார தேரர் மீண்டும் இனவாத கருத்துக்களைப் பரப்பும் தனது வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இவற்றின் காரணமாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதேவேளை இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பும் போதிய நடவடிக்கைகளை எடுக்காத அதேவேளை முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசாங்கத்திற்கு போதிய அழுத்தங்களை வழங்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந் நிலையில் இவ்வருடம் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் மே 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களை இங்கு தொகுத்து தருகிறோம். 16.04.2017: தென் மாகாணத்திலுள்ள கொடபிட்டிய, போர்வை நகரில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 4 கடைகள் மீது அதிகாலையில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.அக்குரஸ்ஸ நகரிற்கு உட்பட்ட ஓர் முஸ்லிம் கிராமமே போர்வை. இங்கு16.௦4.2௦17 அன்று அப்பிரதேச தொடர் கடைத்தொகுதி 1௦ ஐ இலக்காக கொண்டு இரண்டு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் இரவு 1:45 அளவில் இடம்பெற்றுள்ளது. என்றாலும் இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. நான்கு கடைகளின் முற்பகுதியில் மாத்திரம் சிறு சேதம்.
உரிய நேரத்தில் அருகே உள்ள வீட்டு உரிமையாளரின் சாமர்த்தியமான நடவடிக்கை காரணமாக பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
17.04.2017 : காலி கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஷெய்ஹ் சாலிஹ் வலியுல்லாஹ் ஸியாரத்தின் பாதுகாப்பு மதில்கள் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டன.
20.04.2017 : அம்பாறை, இறக்காமம், மாயக்கல்லி மலையடிவாரத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் காணியை ஆக்கிரமித்து அதில் பௌத்த விகாரையை நிர்மாணிப்பதற்கான ஆரம்பப் பணிகளை பிக்குகள் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்தனர். இதனால் அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. 25.04.2017 : அம்பாறை, இறக்காமம், மாயக்கல்லி மலையடிவாரத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் காணியை ஆக்கிரமித்து அதில் விகாரை நிர்மாணிக்கும் பணிகளை பார்வையிட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் அப் பகுதிக்கு விஜயம் செய்தார். அத்துடன் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டதுடன் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் கருத்துக்களையும் அக் கூட்டத்தில் வெளியிட்டார். நாட்டில் மேலும் 10 ஆயிரம் பௌத்த விகாரைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.14.05.2017 : பொலன்னறுவை, ஓனேகம பகுதிக்கு விஜயம் செய்த பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் அப் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததுடன் மாட்டுக் கொட்டில்களையும் கழற்றி எறிந்தனர். இதன்போது 'அல்லாஹ்'வை அவமதிக்கும் வகையிலான வெறுப்புப் பேச்சுக்களை ஞானசார தேரர் பேசினார்.

பாணந்துறை பழைய பஸார் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது அதிகாலை 3 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்
டது. இதில் பள்ளிவாசலின் உட்பகுதிகள் சேதமுற்றன. சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
அல் இப்ராஹீமிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் மீது அதிகாலை 1.45 மணியளவில் சுமார் 8 பேர் அடங்கிய குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் பள்ளிவாசலுக்கு சேதம் ஏற்பட்டது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
16.05.2017 :
பொது பல சேனா அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றி ஞானசார தேரர், முஸ்லிம்களுக்கு எதிராகவும் இஸ்லாத்துக்கு எதிராகவும் வெறுப்பூட்டும் கருத்துக்களை முன்வைத்ததுடன் 'அல்லாஹ்'வை அவமதிக்கும் கருத்துக்களை மீண்டும் வெளியிட்டார்.
16.05.2017 :
செல்வநகர், நீணாக்கேணி பிரதேசத்திற்குள் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளுடன் நுழைந்த சுமார் 200 பேருக்கும் மேற்பட்ட கும்பல் அப் பகுதியில் வாழும் முஸ்லிம்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சிலர் காயமடைந்ததுடன் 16 வீடுகள் சேதமடைந்தன. அன்றிரவு அக் கிராம முஸ்லிம்கள் அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறி பள்ளிவாசலிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர்.
17.05.2017 :
பாணந்துறை, எலுவில பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பேக்கரி ஒன்றும் தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றும் பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகின. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
18.05.2017 :
வென்னப்புவவில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான லாஸ்ட் சான்ஸ் எனப்படும் வர்த்தக நிலையம் அதிகாலை 2 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டது.
21.05.2017:
00:00
பொதுபலசேன செயலாளரை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை!
குருநாகல் பகுதியில் பதற்றநிலை!

03:30
குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்றுமாத்திரமே வெடித்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலினால் பள்ளிவாசலின் கண்ணாடிகளை சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அமைதிக்காக பிரார்த்திக்குக : உலமா சபை வேண்டுகோள்
Ibnu Asad
கருத்துகள்
கருத்துரையிடுக