பாடசாலை வாழ்க்கை

பாடசாலை நோக்கி வந்தோம்

பாலர்களாய் வந்து சேர்ந்தோம்

பாருவத்தை கடந்து நின்றோம்

பட்டதாரிகளாய் மாற உள்ளோம்

பாடங்கள் பல கற்றோம்

பாதையை சீரமைத்துக் கொண்டோம்

பதக்கங்கள் பல பெற்றோம்

பரீட்சையும் எழுத உள்ளோம்

பயணங்கள் பல சென்றோம்

பகிடிகள் சில செய்தோம்

பள்ளித் தோழர்களையும் பெற்றோம்

பாரினையும் வெல்ல உள்ளோம்

பகிடிகள் சில செய்தோம்

பட்டங்கள் சில செய்தோம்

பாசனை நோக்கி கேட்கிறோம்

பாவத்தை மன்னிக்கும்படி வேண்டுகிறோம்

பள்ளியை பிரிய உள்ளோம்

பாரினை நோக்கி செல்கிறோம்

பள்ளித் தோழர்களிடம் வேண்டுகிறோம்

பாடசாலையை மறவாமல் வாழ்வோம்

Ibnu Asad

கருத்துகள்