சிரியாவின் பாலை நிலத்தில்
சிறுவர்களை கொன்று குவிக்கும்போது
ஐ நாவின் கூல் அறையில்
ஐ நாய்கள் சிறுவர் உரிமைக்காக
சிங்காரமிட்டு கூடியது.
நானும் கள்ளன் நீயும் கள்ளன்
பாராளுமன்றத்தில் உளறும்போது
பகல் கொள்ளைக்காக
வட்டாரத்து சிறுவனை
வற்புறுத்தி அடைத்தனர்- சிறையில்
இனவாதிக்கு இரவை ஒதுக்கிவிட்டு
பாராளுவோர் பகலில் கூடினர்
பாரைப் பாதுகாப்போம் – நீதியை
பாரபட்சமின்றி நிறைவேற்றுவோம் – என
பகிடிப் பேச்சுக்களுடன் – பாராளுமன்றத்தில்
மானிடத்தில் அரசுகள் உருவாகின
மாண்டோர் உரிமையை பாதுகாக்க
அரசுகள் இன்று நாடகமாடுது
தன் சுய நலத்திற்காக
மனிதாபிமானத்தை மயானத்தில் அடக்கிவிட்டு
கருத்துகள்
கருத்துரையிடுக