சினிமாவும் இன்றைய உலகத்திற்குமான தொடர்ப்பு மிகவும் பிண்ணி பிணைந்தாகவே காணப்படுகிறது என்பதை நாம் மறக்கவோ மறைக்கவோ முடியாத ஓர் உண்மையாகும் .
இந்த சினிமா துறையை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் அதில் உள்ள நன்மைகள் எவை தீமைகள் எவை என்பதை பார்ப்பதோடு இஸ்லாம் இந்த சினிமா சம்பந்தப்பட்ட எத்தகைய விமர்சனங்களை முன்வைக்கின்றது சற்று ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
இஸ்லாம் அனைத்து விதமான சினிமாக்களையும் ஒதுக்கி உள்ளதா அல்லது சினிமாவிற்கும் இஸ்லாம் ஓர் இடம் வழங்கியுள்ளதா என்பதை நாம் தேடி கற்க வேண்டும்.
அல் குர்ஆன், ஹதீஸ், நிழலின் கீழ் சினிமாவிற்கான அங்கிகாரம் என்ன???? ,இஸ்லாமிய சட்டக் கலை இது பற்றி ஏது பேசுகிறது????,இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்கள் யாவை???,என்பதை சற்று இன்றைய காலகட்டத்தில் ஆய்வு செய்து பார்த்தால் இஸ்லாத்தில் சினிமாவிற்கும் ஒரு தொடர்ப்பு இருப்பதை அறியலாம். இஸ்லாம் எவ்வாறான சினிமாக்களை அங்கிகரித்துள்ளது. எவ்வகையான சினிமாக்களை தடை செய்து உள்ளது என்பதை நாம் விளங்கி கொள்ள முடியும்.
இஸ்லாமியர்கள் திரையரங்கிற்கு செல்லலாமா ???
பெதுவாக இஸ்லாத்தின் பார்வையில் சினிமாகும் , திரையரங்கும் ஹராம் என்ற நிலைப்பாடு காணப்படுமாயின் அது இஸ்லாமியர் அனைவருக்கும் ஹராம் என்ற விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் அதில் எவ்வித ஜயமும் நமக்கு தேவை இல்லை.
ஆனால் இன்றைய சினிமா ஆண்களுக்கு ஹலால் ஆகவும், பெண்களுக்கு ஹராம் ஆகவும் கணிக்கப்பட்டு வருகின்ற விடயத்தை ஜீரணிக்க முடியவில்லை .
இஸ்லாமிய ஆண் மகன்(மகான்) அனைவரும் சினிமா பார்ப்பதற்காக ஒவ் வொரு திரையரங்குகளாக சுற்றி வலம் வந்து கொண்டு இருக்கின்றார்கள் .இது தவறாக பார்க்கபடுவது எமது சமூகத்தில் மிக குறைவாகவே உள்ளது, அதற்கு மாற்றாக ஒரு பெண் திரையரங்கு சென்றால் ஒட்டு மொத்த எம்மவர்களும் ஒன்றிணைந்து அந்த பெண்ணின் புகைப்படங்களோடு சமூக வலைத்தளங்களில் உலகம் முழுவதும் பார்க்கும் வண்ணம் செய்து அவளுடைய மானத்தை வாங்கி விடுவார்கள்.
சிலருக்கு இன்று இது ஒரு பெரிய நோயாவே மாறியுள்ளது. சிலர் பாவங்கள் மட்டும் தான் நமக்கு தேவை என்று Hot news காக காத்து கொண்டிருந்து இவ்வாறான செய்திகள் வந்த உடனே அதன் நன்மை,தீமை அறியாமல் பரப்பிவிடுகின்றனர் .
இவ்வாறானவர்கள் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள். பொது வெளிகளில் மக்களுடைய மானங்களுக்கு அப கீர்த்தி விளைவிற்காதீர்கள்.
இவைகளுக்கு மாற்றமாக எமது சமூகம் படும் கஷ்டங்களையும், துயரங்களையும் பற்றி சமூக ஊடகங்களில் பேசுங்கள் .
இவைகளை பற்றி பேச யாரும் இல்லை ஒரு பெண் தெரிந்தோ , தெரியாமலோ ஒரு காரியத்தை செய்தால் அதை பரபரப்பாக ஆக்கி விடுகின்றார்கள் இதில் என்ன சந்தோஷம் உள்ளதோ என்பது நமக்கு தெரிய வில்லை???
மறைக்க வேண்டிய விடயங்களை நாமே திரைப்போட்டு காண்பித்து கொண்டிருக்கின்றோம்.இவையெல்லாம் ஒதுக்கீடு செய்துவிட்டு நமக்கு தேவையான விடயங்களை பற்றி ஆய்வு செய்தால் அது நமக்கும் எம் சமூகத்திற்கும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏன் இவ்வாறான சமூக தீமைகளை சற்று மறைத்து அவர்களுக்கான வழிக்காட்டுதல்களை செய்தால் தான் என்னவோ???
ஏன் நாங்கள் எங்களுடைய தலையிலேயே மண்ணைவாரி போட்டுக் கொள்ள வேண்டும்.
இனியாவது சற்று சிந்தித்து செயல்படுமா எங்களுடைய சமூகம் .....
கருத்துகள்
கருத்துரையிடுக