கனவில் தேடி கவிதையாய் விதைக்கிறேன்
நினைவில் மிஞ்சும் இனித் தேன் நீயடி
எண்ணங்களை அசை போட்டு நான் செதுக்கும்
முதற் சிற்பம் நீயடி
அந்த
உன் வண்ணங்களில் தோற்ற
நிராயுதபாணி நானடி
உன்னில் நான் கலக்க
நீ நாணம் கொண்டது ஏனடி
உன்னில் நானிருக்க
உன் உடையில் சேர்வேனடி
உன் உதிரத்தில் கலந்திருக்க
உணவாய் உனக்காக ஆவேனடி
உன்னைத் தாங்க பாதணியாவேனடி
முட்களை நீ மிதிக்க
முதலில் உனக்காக நோவேனடி
உதிரோடு கலந்து
உயிராய் உன்னில் வாழ்வேனடி.
கருத்துகள்
கருத்துரையிடுக