சீறிய சுறா

பள்ளிப்பருமவது. மிகவும் துடிதுடிப்பாய் ஓடுத்திரியும்காலம். தொலைக்காட்சியும்  வீட்டில் ஓடிக்கொண்டிருக்கின்றது. திடீரென பிரேக்கிங் நிய்ஸ். தொலைக்காட்சியருகே எல்லோரையும் கூட்டிவந்து நிறுத்துகிறேன். சுனாமி தாக்கம் எனச் சொல்லி அவலங்கள் பற்றி அங்கு வாசிக்கப்படுகின்றது.bஏதும் அறியா நானோ ஆந்தையாய் முழித்துக்கொண்டிருக்கிறேன். மாற்றும் செனல் எல்லாம் அதுவாய் ஒளிக்க கடைசியில் நானே ஓர் முடிவு எடுகிறேன்.ஆம் அது சுறாமீன் தாக்கமொன்றாமென்று.. புரியா வயதது. அடிக்குறிப்பை வாசிக்காமலேயே செய்திவாசிப்பாளரின் முகப் பக்கமே என் முழுக்கவனமும்  இருக்கும். ஏதோ பேரழிவு என்பதை  படங்களும் திரைகளும் வெளிச்சம் போட்டுக்காட்டின. சிறுமியென்பதால் பக்கத்துவீடெல்லாம் ஓடியோடி அறிவிக்கிறேன். எல்லோரையும் டீவி முன்நிறுத்தி செய்தி கேட்க தூண்டிவிடுகிறேன். நாட்கள் செல்லச்செல்ல நான் உணர்ந்து கொள்கிறேன் சுனாமியென்பது கடலலை சீற்றமொன்றென்று.  அழிவுகள் இலங்கையை ஒரு குலுக்கி  குலுக்கிப்போட்டதை  சிலநாட்களின் பின் புரிந்துகொள்கிறேன் .வாட்டம் சூட வலித்ததற்போதே. அன்றைய நாள் இன்றைய நாளாய் இருக்க அன்று கண்ட வடுக்கள்  இன்றும் ஆறா நிலையில் கடவுளிடம் கையேந்துகிறேன் திருநாடு மீண்டுமொருமுறை சுனாமியை சந்திக்கக்கூடாதென்று.
Bindhi Ameen SEUSL வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்