பொறுமை

மறுமைக்குத் தயாராகும் இவ்வையகத்தில் பெருமைகள் பல கொண்ட பொறுமையைத் தாங்கிய உள்ளங்கள் அருமையிலும் அருமையே.....

தித்திக்கும் தேன் மறையில் துறை பல நவின்றிடும் ஏகன் மறுமையின் வெற்றிக்காய் பொறுமையின் சிகரம் தொட்டு இம்மையிலும் சிறப்புறச் சொல்கின்றான்

இஸ்லாத்தில் வேரூன்றிய இறையோனின் அடியார்கட்கு பொறுமை பெரியதொரு பொக்கிஷப் பெட்டகமே.....

வறுமையிலும் பொறுமை வாழ்வுக்கு வலிமை சேர்க்கும்..... இழப்பிலும் பொறுமை இதயங்களுக்கு உரமூட்டும்.....

பொறுமையின் பெருமையாய் மரியாதை முன் நெற்றியின் வைர கிரீடமாய் மாறும் திறமைகள் உன்னைச் சுற்றியே திடமான வேலி போடும்......

கவிதாயினி இல்மா

வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்