பெண் என்று பிறந்திட்ட
பாவமோ...
நானறியேன்...
சீதனம் எனும் சந்தையில்
சிக்கித் தவிக்கின்றேன்...
நானும் ஓர் உணர்வுள்ள
பெண் என்பதை உணர
மறுக்கும்
ஊனமுற்ற உள்ளங்கள் சில.....
மனதின் ஏக்கங்கள்
ஏமாற்றங்களாக...
ஆசைகள் அநாதரவாகிட.....
விழிகளில்
கண்ணீராய்
காலங்கள் கரைகின்றன....
அழகுக்கும் பணத்திற்கும்
ஆசைப்பட்ட உலகத்தில்
பந்தாடப்படும்
பாவை இவள்......
என் சகபாடிகள்
கையிலொன்று
வயிற்றுலொன்று
என
சுமந்து நிற்கையில்
என் மனசும்
சுமையாகி தான் விடுகின்றது...
நிறை மாதக் கர்ப்பிணியான
கல்லூரி நண்பியைக் கண்ட
மறு நிமிடம்...
எனை மறந்து என் வயிற்றை
தொட்ட நிமிடம் இன்னும்
என்னுள் காயங்களாக.....
சீதனம் எனும் பிச்சை கேட்கும்
ஆண்களே...
சபதமிட்டு சொல்கின்றேன்
மறுமையில்
உமக்கெதிராக நானும்
இறைவனிடத்தில்
வாதாடுவேன்
முதிர்கன்னி என்ற பட்டத்தை
எனக்கு வழங்கிய
நன்றிக்காக........
கருத்துகள்
கருத்துரையிடுக