உஷார் நீங்களும்தான்!

"தூபி மீறி ஏறிய முஸ்லிம் இளைஞன் கைது " என இரண்டாம் தடவையும் செய்திகளுக்கு தலைப்புச் செய்தி வந்துவிட்டது. நாம் இதனை நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை . இப்பொழுது எங்குபோனாலும் சாப்பிட்டாலும் கூட ஓர் போட்டோ எடுத்து போஸ்ட் போடாமல் யாரும் இருப்பதில்லை. தாம் எங்கே செல்கின்றோம், ஒவ்வொருநாளும் என்னென்ன செயல்களில் ஈடுபடுகின்றோம், தம் கவலை திருமணம் ,மறுமணம் என  தேவையற்ற விடயங்களைக்கூட அப்டேட் செய்ய நானும் நீங்களும் தவறுவதேஇல்லை.

தூபி மீது ஏறியது, புகைப்படம் எடுத்தது  அவர்களின் குற்றத்துக்கு  அன்று பிரச்சினையைகொடுக்கவில்லை. மாறாக சமூகவலைத்தளங்களில் அவற்றை இட்டமையே அவர்களின் நடவடிக்கையை கேள்விக்குறியாக்கி தண்டப்பணம், சிறைச்சாலை என பலநூறடிக்கு இழுத்துச்சென்றதென்பேன்.

இளைஞர்,  யுவதிகளான நாம் சமூகவலைத்தளங்களை முறையாக கையாளவேண்டிய இக்கட்டான காலகட்டத்தில்  இருக்கின்றோம். எதுவாயிருப்பினும்  இணையதளத்தில்  இடமுன்  பின்விளைவை  யோசித்து நிதானமாக முடிவெடுக்க வேண்டும்.

சமூக பிரச்சினைகளுக்கு நாமே காரணமாக இருக்கக்கூடாது. தொல்பொருள்களில் ஏறி உதாசீனம் செய்வது தண்டனைக்குறிய குற்றமாக இருப்பதனால் பலகையில் "பாதுகாக்கப்பட்ட இடம்" என குறிப்பிடப்படாவிட்டாலும்  கூட இனி நாம் பழைய கற்சிலைகளோ கட்டிடங்களோ நாம் சந்தேகிக்கும் தொல்பொருள் இடங்களிலோ ஏதுவாயிருப்பினும் ஏறாமல் இருப்பது அவர்களுக்கும் எங்களுக்கு மிகவும் நல்லது.

பிறமதத்தவர்களின் விகாரைகள், மதத்தலைவர்கள், குருமார், வைத்தியர் என அனைவரையும் இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறையில் மரியாதை செலுத்தினால் பிரச்சினைகள் கூட பூதாகரமாக வெடிக்காது. சிறியதை பெரியதாக்கி பிரச்சினை உண்டாக்கக்கூடிய இச்சமூகத்தில் எல்லாவகையிலும் நாம் உஷாராக இருக்கவேண்டுமேயொழிய முட்டி மோதி முட்டாளாகக்கூடாது.

 Binth Ameen

SUESL

வெளியீடு : வீயூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்