அறிவுக்கோர் உரமாய் இறை தந்த வரமே கல்வி.... 'இக்ரஃ' என்ற நாதமும் சான்றன்றோ இதற்கு....
அறியாமை என்ற இருளகற்றி அறிவுத் தாகம் தணித்து உச்சி குளிரச் செய்திடுமே உண்மை நிறைந்த கல்வி.....
மடமையில் மதி இழந்து மாதர்களைக் கொலை புரிந்த மனிதர்களைப் புனிதர்களாக்கியதே மறை தந்த மாசற்ற கல்வி....
சுனையென ஊற்றெடுத்து சுகமாய் வரை பாய்ந்து நில்லா நதியாய் ஓடிடுமே நிலையிலா நிறைபொருட் கல்வி....
ஆதவனின் கீற்றொளியாய் இரவு வானின் விண்மீனாய் தண்மதியின் பால் நிலவாய் மங்காதே என்றும் கல்விச் சுடர்.....
கருத்துகள்
கருத்துரையிடுக