பணிவுடன் நடந்த மாநபி

சன்மார்க்கத்தை நிலைநாட்டிட சத்தியத்தை உயிர்ப்பித்திட சமூகத்தை வழிநடத்திய சாந்தி நபியின் சங்கைமிகு பக்கமிது.

பகையிருந்தாலும் பகைவனுடன் பணிவுடன் நடந்து பண்பை நிலை நாட்டிய பாச நபியின் பணிவான பாகமிது.

தன் உயிரிலும் மேலான இஸ்லாத்தை தாயிபிலும் ஏற்றிட தமயனுடன் தாயிப் சென்ற தாஹா நபிக்கு தடியெடுத்துத் தாக்கிய தாயிப் மக்களையும் தன் உடன் பிறந்தார் என மதித்து தண்டிக்க விடாமல் தடுத்த தாஹா நபி

கண்டவிடத்தில் வஹ்சியின் கழுத்தையறு என கட்டளையிட்ட காருண்ய நபி – வஹ்சியை கருணையுடன் மன்னித்து கவர்ச்சியான சுவனத்திற்கு கண்ணியமாகச் செல்ல வழிவிட்ட கருணை நபி.

உலகிற்கு வழிகாட்டியாக உதித்த, உத்தம நபி உபத்தரம் செய்யாமல் உரிமைகளைப் பறிக்காமல் உதவிகள் செய்து உண்மையை உணர்த்த உறுதியுடன் வாழ்ந்த உம்மி நபி

சமரின் போது சாபமிட்டபடி – தன் சாச்சாவின் ஈரலை சப்பித் துப்பிய ஹிந்தாவை சபிக்காமல் – மன்னித்த சாந்தி நபி.

தன் உதவியைப் பெற்று தனக்கே வசைபாடிய போதும் தவிக்கவிடாமல் – மூதாட்டியை தன்னம்பிக்கையுடன் உதவிய தாஹா நபி.

இம்மையிலும் மறுமையிலும் இன்பமான வாழ்விற்கு இஸ்லாத்தை நிலைநாட்டி இறையில்லம் கஹ்பாவில் இறை மறுப்பாளர்களையும் இம்சைப்படுத்தாமல் இனிமையாக மன்னித்த இறுதி நபி.

உம் வாழ்விலும் உவகை ஏற்பட உம்மி நபி வாழ்வை உம் வாழ்வாய் உலகில் மாற்றிடு.

Banu Caseem 2nd Place Provincial Meeladh Competitions 2018 Southern Province

கருத்துகள்