ஆன்மாவின் ஏக்கம்…

சுவர்களுக்குள் பூட்டியிருந்த இதயங்கள் - இலட்சியங்கள் பலதுடன் உலகமதை காண கஷ்டங்கள் பல கடந்து காலடி வைக்கும் கனாக்களை கட்டிக்கொண்டு பல்கலையின் வாயிலில்

நடுக் காட்டில் விட்டது போல நடுநடுங்கும் இதயங்கள் உறவுகளை பிரிந்த சேதிசொல்லும் முகங்கள் தெரிந்தவரை தேடி அலைமோதும் பாவப்பட்ட கண்கள் - முதல் நாளில் பயமதின் குறிகாட்டும் உடம்பெங்கும்

அழகாயும் ஆதரவாயும் வழிகாட்ட வேண்டிய மூத்த உறவுகள் 'பகிடிவதை' எனும் நாமம் கொண்டு பயம் காட்ட – ஏலவே காயப்பட்ட அந்த உள்ளங்கள் கசங்கிய காகிதமாய் - எனினும் ஓவியம் வரைய முனைந்திடும் கிறுக்கல்களையும் கசக்கத்தையும் கிழித்தெறிந்து விட்டு - கனாக்கள் பல சுமந்த குற்றத்திற்காய்

பீடத்தினுள் நுழையுமிடத்து நெஞ்சம் படபடக்க விரிவுரை முடிந்து விரைகையில் தலை நிமிராது தரைக்கற்களை எண்ணிக்கொண்டு தடுமாறி போக சிரேஷ்ட உறவுகள் எம் பெயர் சொல்லிட உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்ட- கனாக்களிலும் சோகக் கதை சொல்லும் கண்ணீரோடு

உறவுகளும் உரிமைகளும் பெருமையாலும் அதிகாரத்தாலும் வளராது - அழகுற்ற சொற்களும் - பொன்னான புன்சிரிப்பும் - உறவுகள் உரிமையோடு உன்னதமாய் உருவாக உரமிடும்

சிரேஷ்ட உறவுகளிடத்தில் அன்பான வழிகாட்டலையும் ஆதரவான சொற்களையும் இயல்பான புன்னகையையும் அளவான பகிடிவதையும் மாத்திரம் எதிர்பார்க்கும் - அந்த பாவப்பட்ட ஆன்மா- கருகிப்போன கானாக்களுக்கு மருந்தாக.......

Shamla Sama Mubarak First year SEUSL

கருத்துகள்