வரதட்சனை எனும் கொடுமை வரம் வாங்கி வந்தாள் பெண் என்பது மாறி,
வரதட்சனை வாங்கி வந்தாள் தான் பெண்!
என்ற நிலை என் சமூகத்தில் இன்று உருவாகி உள்ளது!!
இதனை கண்டு எம் சகோதரிகள் கண்ணீருடன் தன் உள்ளத்தில் இருக்கும் மனக் குமுறல்களை கலங்குகிறாள்...
இவ்வாறு நான் முதலில் பெண்ணாக பிறக்க போராடினேன் பிறகு பள்ளிக்கு படிக்க செல்ல போராடினேன்
கல்லூரியில் கணவுகளுடன் போராடினேன்
சமூகத்தில் சுதந்திரமாக நடக்க போராடினேன்!!!!
இதுபோன்று தனிமையில் சில காலம் போராடிய எனக்காக இன்று என் குடும்பமே போராடுகின்றது!!
"வரதட்சனை என்னும் வரி வசூலுக்காக"
நான் பண்பானவள் என நிறுபிக்க பணத்துக்காக போரடுகின்றனர்,
என் நல்லொழுக்கத்தை இந்த சமூகத்திற்கு நிறுபிக்க நகைகளுக்காக போராடுகின்றனர்,
தன் வீட்டிற்க்கு வந்து போக வேண்டும் என வாகனத்திற்காக போராடுகின்றனர்!!!
திருமணம் என்பது நான் வாழ்ந்து காட்ட போகும் வாழ்க்கைக்காகவா!?
இல்லை நான் கொண்டுவரும் வரதட்சனைக்காகவா!!???????
கருத்துகள்
கருத்துரையிடுக