வீட்டில் வளர்ந்த காட்டை காட்டில் கட்டிய வீடென மாற்றிய சோகக்கதை இது
உள் நாட்டு போரில் உரிமையை இழந்த நமக்கு மத்தியரசு வழங்கும் கௌரவம் இது இனவாதிகளிடம் மௌனிப்பது
வடமேற்கில் மரங்களை வெட்டி வீடுகளை கட்டினர் சுதேசிகள் வாழ்வதற்காக
தென்மேற்கிலும் மரங்களை வெட்டி விடுதிகளை அமைத்தனர் விதேசிகளின் வருகைக்காக
ஆனால் அங்கு காடழிப்பு இங்கு நகரமயமாக்கல் இதுதான் சுதந்திரமயமாக்கலில் நாம் அடைந்தவெற்றி
அஷ்ரபின் மறைவிலும் நம்மவர்களின் பதவி மோகத்திலும் மறைந்த பேரம் பேசும் அரசியல் இன்று நம் வாழ்வுரிமையை அழிக்கிறது
கருத்துகள்
கருத்துரையிடுக