காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 14

"என்னடா சொல்லுறே.. கேகேவ காணுமா?" என ஆர்தர் கேட்டான். அதற்கு அவனுடைய நண்பன் ராபர்ட்

"டேய், சத்தியமா சொல்லுறேன்.. இங்க தாண்டா இருந்தான்... நான் கொடுத்த சாப்பாடு கூட வேண்டாம் என்னுட்டான்.. அவனை நேத்து ராத்திரி விட்டுட்டு போனப்போ இருந்து பார்க்கிறேன்.. எந்த கேள்விகேட்டாலும் பதிலே சொல்லாம பாரு பாரு.. என்னோட சேவத்தில ஏதோ கிறுக்கி கிட்டு இருந்தான்." என்று சொன்னதும் ஜெனி அந்த சுவரை பார்க்க சென்றாள்.

"இப்போ கூட அவனுக்கு கொடுக்க சூப் ரெடி பண்ணி கொண்டுவந்தேன்.. அதுக்குள்ள எங்கேயோ போய்ட்டான்." என்றான்.

ஜெனி, அந்த சுவர் கிட்ட போய் பார்த்து அதிர்ச்சி அடைந்து போய் நின்றாள்.. அவளருகில் வந்த மீரா.. "என்ன ஆச்சு.. ஜெனி.."என்று சொல்லிவிட்டு சுவரை பார்த்த போது அதில் ஏதோ கழுகு போல வரைந்து இருந்தது. அதை பார்த்ததும் மீரா அலறிவிட்டாள்.

"ஐயையோ... அப்போ கில்க....இல்ல கே கே... அந்த ஈகிழ் டாட்டோ போட்ட ஆளுங்களை தேடிப்போய்ட்டானா... அச்சச்சோ... இப்போ என்ன பண்ணுறது..."

"நான் எவ்வளவோ சொல்லிட்டு தானே போனேன்... அவசரப்பட்டு எதுவும் பண்ணிடனாம். என்னு... அவ்வளவு சொல்லியும் இந்த கிறுக்கன் எங்க போனான்."என்று ஆர்தரும் சொல்ல திடீரென அருகில் அந்த குரல் கேட்டது.

"நீ இப்போ எந்த கிறுக்கனை பற்றி பேசிக்கிட்டு இருக்கே?"என்றான் கில்காமேஷ்

அவனை கண்டதும் எதைப்பற்றியும் யோசிக்காமல் சட்டென ஜெனி ஓடிப்போய் அணைத்து கொண்டாள்.

"தாங் காட்.. நீங்க வந்துட்டே"  அவ்வளவு தான் மீரா மற்றும் ஆர்தர் வாயடைத்து போய் நிற்க கில்கமேஷ்ஷுக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.

"க்கும்...."என்கிற ராபர்ட்டின் இருமல் சத்தம் கேட்டு தன்னை சுதாரித்து கொண்ட ஜெனி .. பேச்சை வேறு பக்கம் திருப்புவதற்காக அவள் "ஆமா.. நீங்க எங்க போய்ட்டீங்க.. நாங்கெல்லாம் ஒரு கணம் பதறிட்டோம்."

"நாங்கெல்லாமா.. இல்ல நீங்க மட்டும் தானா?" என்று வேண்டுமென்றே மீரா அவளை சீண்டினாள்.

அப்போது தான் எல்லோரும் கில்கமேஷ் கையில் இருந்த காட்டுக்கோழியை பார்த்தனர்.

"அட இது என்ன?"என்று ஜெனி கேட்டாள்.

"எனக்கு பயங்கரமா பசிக்குது. ..அதான் காட்டுக்கு போய் வேட்டையாடிக்கிட்டு வந்தேன்."என்றான்.

அப்போது தான் எல்லோருக்கும் ஒரு விடயம் புரிந்தது..

"அப்படியென்றால் அவன் சுவரில் கிறுக்கிய பறவை இது தானா... கழுகு கிடையாதா..? ஒரு செக்கன்ல எல்லோரும் என்னமோ நினைச்சிட்டோமே..." என்று ஆர்தர் சொல்ல எல்லோரும் கொல் என சிரித்தனர்.

"சரி வாங்க... டுடே ..கே கே ஸ்பெஷல். காட்டுக்கோழி..."என்று கத்திகொண்டே அவனையும் அழைத்து கொண்டு  ஆர்தரும் ராபர்ட்டும் ஓட எதையோ சிந்தித்து கொண்டிருந்த ஜெனி அருகில் மீரா வந்து நின்றாள்.

"என்னங்க மேடம் ரொம்ப யோசிக்குறீங்க போலவே இருக்கு..."என்றாள்.

"அதில்ல டி..... நான் ஏன் அப்படி பண்ணேன் என்னு எனக்கே புரியல்ல...."

"எனக்கு புரிஞ்சி போச்சு..... உனக்கு ஏதோ ஆகிப்போச்சு..அது என்னன்னு யோசிச்சு கிட்டே இரு... நான் போய் சமையலுக்கு ஹெல்ப் பண்ண போறேன்..." என்றுவிட்டு குதித்து கொண்டு அவளும் சென்றாள்.

ஜெனிபருக்கு தான் ஒன்றுமே புரியவில்லை. காட்டுக்குள் அவன் கை பட்டதையே அருவருப்பாக எண்ணியவள். எப்படி ஒரு கணம் தன்னையே மறந்து அவனை எப்படி கட்டிப்பிடித்தாள்  என்பது அவளுக்கே புரியவில்லை. சற்று நேரத்தில் சமையலோடு தானும் சேர்ந்து கொண்டு எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டே கில்கமேஷ்  கொண்டுவந்த காட்டுக்கோழியை சமைத்து கொண்டிருந்தனர். ராபர்ட்டின் அப்பா அம்மா இருவரும் வெளிநாட்டில் வேலை செய்வபர்கள் என்பதால் யாருக்கும் யாராலும் தொந்தரவு இருக்கவில்லை. இவர்கள் மூவரும் வெவ்வேறு ஊர்களில் உள்ள தத்தமது அப்பா அம்மாக்களுக்கு போன் பண்ணி தாங்கள் நலமாக இருப்பதை பற்றி எடுத்து கூறினார்கள். நெருப்பு மூட்டுவதற்காக ஆர்தர் விறகுகளை கொண்டுவர போய் இருந்தான். மீராவும் ஜெனியும் குளித்து ஆடைகளை மாற்றிவிட்டு வந்தனர். ராபர்ட் இந்த சந்தோஷத்தை கொண்டாடவென விஸ்கி பாட்டில் ஒன்றையும் கொண்டுவந்து வைத்தான்.

"டேய்.. என்னடா இது..?" என்று மீரா  ஆர்த்தரிடம் கேட்க அசடு வழிந்து கொண்டே...

"இன்னிக்கு மட்டும் தானே... விடு விடு... நம்ம நாட்டு சரக்கை கில்கமேஷ்ஷும்  டேஸ்ட் பண்ணி பாக்கட்டுமே.."என்றான்.

"போனா போகுது... மன்னிச்சி விர்ரன்."என்றாள். எல்லோருமே சேர்ந்து சமைத்த காட்டுக்கோழியை சாப்பிட ஆரம்பித்தனர்..

"நிறைய நாட்களுக்கு பின்னர் சுவையான சாப்பாடு ..." என்று சொல்லிக்கொண்டே கில்கமேஷ் சாப்பிட  திடீரென அவனுக்கு விக்கல் ஏற்பட்டது...

தண்ணீர் என எண்ணி குவளைகளில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த விஸ்கி அனைத்தையும் மட மடவென குடித்து முடித்தான். ஆர்தரும் ராபர்ட்டும் கண்ணெல்லாம் சொருகி வாயடைத்து போய் நிற்க  ஒரு பெரிய ஏப்பம் விட்டான் கில்கமேஷ். அந்த ஏப்பத்தில் பயந்தே விட்டனர் பெண்கள் இருவரும்.

"அடப்பாவி.. இவன் .ஒட்டுமொத்த சரக்கையும் தீர்த்துட்டானே... இனி என்ன பண்ணப்போறானோ?" என ஆர்தர் சந்தேகத்தோடு கேட்க சட்டென எழும்பி ஜெனியை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வீட்டுக்குள் நடந்தான்...

"அஹ்ஹ்ஹ.."

மீண்டும் வருவான்……. Sanfara.A.L.F வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்