பிஞ்சான வயதில் கஞ்சாய் கள்ளு நஞ்சாய் நாளும் தஞ்சம் கொள்ள
கற்றவை துறந்து இற்றையும் மறந்து விண்ணிலே கனாக்கள் மண்ணிலே வீழ்ந்தபடி
காசுக்கு அடிதடி ஓசியில் குடி நாசுக்கு நான்கு நாளும் உயிர்பழி
நரைமுடி வளர்வதற்குள் நரைபழியாக துடிப்பதேனடா? கழுகுக்கு இறையயாய் போதைக்கு பணிவதேன்?
உன் போதையின் ஊருகாயாய் பல பேதைகளை பிணம் திண்ணிகளாக்குவதேன்?
உனக்காக சாதனை பக்கங்கள் சரித்திரங்களாய் மாறிட காத்திருக்கையில் ஆறடி பள்ளத்துள் ஆழமாய் துயில் கொள்ள ஆயுளை குறைக்காதே!
சுழலும் காற்றாய் சுட்டெரிக்கும் அக்கினியாய் மாறி மாற்றத்தோடு முன்னேற விடுதலைபெறு மனமே புது விடியலை தேடு!
கருத்துகள்
கருத்துரையிடுக