போய் வரவா?

போய் வரவா? உறவே ! போய் வரவா? போய் வரவா? முஸ்லிமே ! போய் வரவா ?

அல்லாஹ் அனுப்பிய தவணை முடிந்ததுவே! அமல்களின் அனலும் அடங்கி போனதுவே ! ஓர் மாதம் உம் அனுமதி கேளாது நுழைந்த - நான் நீர் விரட்டாமலே - உம் குடிலை விட்டு விடியல் பிறையோடு வீடு செல்கிறேன்

போய் வரவா? உம்மத்தே! போய் வரவா ? போய் வரவா? மக்கத்தே ! போய் வரவா?

வாட்டும் வெயிலில் பசியோடு தாகித்திருக்க தண்டணையோ? என்றீர் ! ஏழையின் பசியை உணர்ந்துவிட்டோம்..... ஓடி விடு என்றீர்! இக்கனம் - நீர் விரட்டாமலே விரண்டோடுகிறேன்- என் இரட்சகனிடம்

போய் வரவா?உறவே ! போய் வரவா ? போய் வரவா? முஸ்லிமே! போய் வரவா?

காசற்றோனையும் மாசற்றோனையும் ஒன்றாக்கி தவறாது தஹஜ்ஜத்தில் எழுப்பி சத்தியத்தை உரைத்து வழிகேட்டை விழியால் வீழ்த்தினேன்

கதறுகிறேன்...துடிக்கிறேன்... நா வரண்டு வார்த்தை குழைகிறது.... என் றப்பே! விழுந்து விழுந்து கவனித்தார்களே! விரைந்தோடி தர்மம் செய்தனரே !

இத்தனை நாள் எனக்கு உணவளித்த உம்மத்தை விட்டுப்பிரியத்தான் வேண்டுமா?

போய் வரவா ? உறவே! போய் வரவா? போய் வரவா? முஸ்லிமே ! போய் வரவா ?

இனி என் சத்திய ஆட்சியை அசத்தியமாக்க விளங்கிட்டவன் வெளியேறும் நாள் !

சபிக்கப்பட்டவனின் சரித்திர வேலைகள் சீராய் தொடரும் நாள்

இருந்தும் அவனிடம் ஒரு சேதி உரைத்தே செல்கிறேன்.... உண்மையான முஸ்லிம் உனக்கு தோழனல்ல! அவன் என் தோழன் என்று...

போய் வருகிறேன்... உம்மத்தே போய் வருகிறேன்... போய் வருகிறேன்... மக்கத்தே போய் வருகிறேன்....

கவிச்சாரல் சாரா புளிச்சாக்குளம்

கருத்துகள்