அகதி

தொன்னூறாம் ஆண்டில் தொலைக்கப்பட்ட வாழ்க்கை முகவரியுடன்  இருந்த எம்மை முகவரி இல்லாமல் வழியனுப்பினார்கள்.

உருண்டு புரண்டு உண்டு கழித்து உரிமையோடு சுற்றித் திரிந்த பூமியில் உரிமை போராட்டத்தை கையில் ஏந்த வைத்தார்கள் ஏன் நாங்கள்  என்ன பாவம் செய்தோம்??

எங்கள் ஊர் எங்கள் வாழ்க்கை எங்களோடு சந்தோசமாக இருந்தது. ஒரே ஊரில் பல இனத்தவர்களை சொந்த உறவு போல் நோக்கியது நாம் செய்த குற்றம் போல!!

படித்த பாடசாலையை பக்குவத்தின் பள்ளிவாயலை வியர்வை சிந்தி உழைத்த சொத்துக்களை மூன்று நாள் அவகாசத்தில் புடிங்கி விட்டு துரத்தினர்.

பல இலட்சம் ரூபாய்களை பாதையில் போட்டு விட்டு போகச் சொன்னர். கையில் நம்பிக்கையும் மனதில்  இறைநம்பிக்கையும் துணையாக  இருக்க எங்கள் பயணம்  ஆரம்பமானது.

இருபது வருடங்களை தாண்டி விட்டது எங்கள் வரலாறு இன்னும் ஒக்டோபரில் மீளாத் துயராக கூறப்படுகிறது. ....... ஆனால் இதுவரைக்கும் அவர்கள் எங்களை விரட்டியதற்கான காரணத்தை கூறவில்லை

பஸ்ல் வௌியீடு: வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்