ஆண் பெண் நட்பு

தயக்கத்தோடு ஆரம்பிக்கும் முதல் உரையாடல்.

பயத்தோடு பகிர்ந்து கொள்ளப்படும் அலைபேசி எண்கள்.

அவன் தவறாக எண்ணிவிடுவானே?- என்று யோசித்து,யோசித்து பேசும் தருணங்கள்.

காதல், கீதல் என உளறுவானோ?- என்று குழப்பத்தோடு பேசும் ஆரம்பக்காலங்கள்.

புரிதல் தொடங்கும் நேரத்தில் தானாக மலர ஆரம்பிக்கும் நட்பு மலர்.

புரிந்து கொண்ட பின், ஆண்- பெண் வித்தியாசத்தை காணாமல் ஆக்கும் நட்பின் ஆழம்.

தோல்விகண்டு துவலுகையில் புதுத்தெம்பூட்டி, அடுத்த முயற்சிக்கு அடிதளமிடவைப்பான்

ஆடவர் நால்வர் முன் தைரியத்தோடும் பெண்மை மாறாமலும், வாழ வழிகாட்டுவான் எனக்கு நீ தோழன்

முடிவில்லா முடிவில்- நட்பு வளர்ந்து நிற்கும்? புரிந்து இருக்கமாட்டார்கள் என்னை, என் நண்பனை விட வேறு யாரும் நன்றாக என்னும் ரீதியில்...! வளரட்டும் இதுபோல்

Yumna manha வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்