இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யாக புனையப்பட்ட கட்டுக்கதைகளாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.
பொரும்பான்மை சிங்கள சகோதரர்களை இனவாத கருத்துக்களின் மூலம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக திசை திருப்பி நாட்டில் ஒரு குழப்ப சூழலை உருவாக்கி அதன் மூலம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்த வங்குரோத்துக்காரர்கள் தோல்வியடைந்து தற்போது செய்வது அறியாது வாயடைத்துப் போயுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் நிதானமாக நடந்தது கொள்ள வேண்டும். வெற்றிக் களிப்பில் எல்லைமீறி கருத்துக்களை பறிமாறவேண்டாம். தற்போது ஏற்பட்டுள்ள சமூக ஒற்றுமையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளின், இயக்கங்களின் ஆதரவாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாம் சார்ந்திருக்கும் கொள்கையை முன்னிலைப் படுத்தி மற்ற கட்சிகளையும் இயக்கங்களையும் விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
இப்போதுதான் உலமாக்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் வேலை ஏற்பட்டுள்ளது எம்மை சுயபரிசீலனை செய்துகொள்ள வேண்டும். இதற்கான சரியான முன்மொழிவுகளை மக்களிடம் முன் வைக்கவேண்டும்.
இதை நாம் செய்யத் தவறினால் இந்த நிலை தொடரும் என்பதில் சந்தேகமில்லை. இளைஞர்களை சரியாக வழிநடத்தும் பொறுப்பு இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக