இலட்சியம்!

இலட்சங்களாக விரிந்து கிடக்கும் - என் இலட்சியங்கள் முயற்சி விதைத்து முளைத்து இன்று விருட்சங்களாக விரிந்து கிடக்கின்றன.

முளையிலே கிள்ளி எரிய பல கைகள் முடமாக இருந்தும் முன்னேற்றிவிடத்துடிக்கும் சில கைகள்

பலபோது வார்த்தைகளும் சிலபோது செயல்களும்- என் இலட்சியப்பாதையில் முட்டுக்கட்டைகளாக!

எத்தனை தடைகள் வந்தாலும் என்ன? என் கைகள் இருக்கும் வரை என் நம்பிக்கைகள் சாகாதவரை - துணிவேன் தடைகள் தாண்டிச் செல்வேன் இலட்சியச் சிறகுகள் அணிந்து எனதான் இலட்சிய உலகில் சுதந்திரமாகப் பறப்பேன்.

சஸ்னா பானு நவாஸ் திஹாரி வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்