உத்தம தியாகிகள்

உத்தம நபித்தோழர்களே! உன்னத உயிர்த் தியாகிகளே! இஸ்லாத்தின் காவலாளர்களே! இன்னுயிரீத்த உத்தமர்களே!

உங்கள் பாதச்சுவட்டின் ஓசை தினம் ஒலிக்கிறது - சுவர்க்கத்திலே ஆனாலும் உங்கள் அழுகுரல்களும் விம்மல்களும் தினம் தினம் ஒலிக்கிறது - நம் சிந்தையிலே!

காபிர்கள் செய்த கொடுமைகளை பொறுத்தே நின்றீர்கள் - ஈமானுக்காய்

பிலால் இப்னு ரவாஹாவே! பாலைவன மணலில் கிடத்தி பாறாங்கல்லை நெஞ்சிலே வைத்த போதிலும் சொன்னீர்கள் - இறைவன் ஒருவனென்றே!

யாசிர் ரழியல்லாஹு அன்ஹுவே! இருகால்களும் இரு ஒட்டகங்களிலும் கட்டி உயிர் பிரியும் வேளையிலும் சொன்னீர்கள் - இறைவன் ஒருவனென்றே!

ஸுஹைப் இப்னு ஸினானும் விரட்டப்பட்டார்கள் தன் தாயினால் இறைவன் ஒருவன் என்று சொன்னதற்காக!

வீரத்தியாகி சுமையாவே! இஸ்லாத்தின் விரோதி அபூஜஹ்ல் ஈட்டி கொண்டு உங்களை தாக்கும் போதிலும் சொன்னீர்கள் - இறைவன் ஒருவனென்றே!

அம்மார் ரழியல்லாஹு அன்ஹுவே! உங்களையும் விட்டுவிடவில்லை அவர்கள் சித்திரவதைப்படுத்தினார்கள் தண்ணீரில் மூழ்கடித்தே!

கப்பாப் இப்னு அரத்தும் சுடப்பட்டார்கள் இரும்பினால் இறைவன் ஒருவன் என்று சொன்னதற்காக!

இஸ்லாத்தின் இன்னுயிர் நாடிகளே! இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறோம் - தினம் உங்களிடத்தில் வீற்றிருந்த பொறுமையும் ஈமானியமும் நமக்கும் கிடைக்க வேண்டும் என்று

உங்களை சந்திக்க வேண்டும் நாளை - சுவர்க்கத்திலே நாங்களும் உத்தம தியாகிகளாக!

Sasna Baanu Nawas Thihariya. வௌியீடு: வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்