எங்கள் ஆசான்

திங்கள் உதித்தால் வெண்தாமரை முகத்தை செந்தாமரையாக்கி உலகம் உனது கையளவு என உரமாக ஊட்டும் உன்னத உறவு என் ஆசான்

காலை எழுந்தால் காலைக்கடனை கடமையோடு நிறைவேற்று கட்டளையின் பெயரில்- இறைவனை தொழு என்று அன்னைக்கு அடுத்தபடியாக அழகாக புகட்டிய உன்ன உறவு எனது ஆசான்

'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா' என்பதை ஐந்தோடு சுருக்கி ஐம்பதில் தடம் பதிப்பதை அன்பாக கற்றுத் தந்த உன்னத உறவு எங்கள் ஆசான்

அகரவரிசையோடு அடங்கிய குழந்தை பருவத்தை ஆதி வரிசையோடு போராடு! உன் கைக்குள் உலகம் உருளும் என்று ஊட்டிய உன்னத உறவு எங்கள் ஆசான்

பாடசாலை வாழ்க்கை பல பேருக்கு கிடைப்பதில்லை கிடைத்த சில பேரும் கின்னஸ் சாதனை படைக்காமல் இருப்பதில்லை என்று உறவாக உணர்வோடு கலந்து ஊட்டிய உன்னத உறவு எங்கள் ஆசான்

கெட்டதை விடு நல்லதை எடு என்பதை தன் நாவினாலும் கைகளினாலும் தன்னை தட்டுத் தடுமாறி அர்ப்பணித்த உன்னத உறவு எங்கள் ஆசான் .

பஸ்ல் வௌியீடு: வியூகம் வெளியீட்டு மையம்
 

கருத்துகள்