எத்திசை ஏகினும் சத்தியமின்றி வாழும் சித்திரவதைக் கூட்டத்தின் எச்சம்
மனதின் இச்சைக்கு இணங்கி பாவத்தினை துச்சமாய் நினைத்து வேசம் போட்டு நாசம் செய்யும் மோசக்காரக் கூட்டம்
வன்முறை வார்த்தைகளால் வசைகளைப் பொலிந்தே காட்டிக் கொடுத்தும் கூட்டிக் கொடுத்தும் குளிர் காயும் கொடுமைக்காரக் கூட்டம்
இரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளாய் மனிதக் குரல்வளை நசித்து குருதி உறிஞ்சும் பாதகர் கூட்டம்
குடியரசைத் தேடுகிறேன் புகழ் எனில் பல்லிளிக்கும் புத்திகெட்ட மாந்தரினால் அராஜக ஆட்சியினில் மீட்சியின்றியே சந்ததிகள் மாளும்
பிஞ்சுகளைப் பதம் பார்க்க அஞ்சிடாத நஞ்சினை மிஞ்சிய வஞ்சகரை அஞ்சுகிறேன் நாளை மனித குல வரலாற்றை இரத்தத்தால் எழுத வேண்டுமோ?
கருத்துகள்
கருத்துரையிடுக