எது ஊனம்?

ஊனம் எது என்று உணர்வாய் சொல்ல இது என் உணர்வலைகள் நான் கண்ட ஊனத்தின் சில அடிப்படையில் எத்தனிக்கின்றேன்

நீ உலகைக் கண்கொண்டு அதில் இயற்கையை ரசிக்கிறாய் பல முகமூடி மனிதம் கண்டு அவன் செயல் தூற்றி புறம் புகழ்கிறாய்

வலதால் கொடுத்து பின் அதை இடதாய் அழைக்கின்றாய் தியேட்டர் காட்சிக்கு நடைபோட்டு டிக்கெட் எடுக்கிறாய் ஆனால் மார்க்க சபைக்கு உன் கால்களை முடக்குகின்றாய்

நாலு பேரை புறம் பேச நாவுக்கு நேரம் எடுத்து திக்ருக்கு விடை கொடுக்கிறாய் ஆனால் ஷகராத்தில் நேரமிழந்து பரிதவிக்கிறாய் ஒரு நிமிடம் பிந்தாதா என

கொஞ்சம் நில் ஒரு சில உன்னிடம் கெட்டவை புகழ்ந்தாயா? கெட்டவை பார்த்தாயா? கெட்டவை கேட்டாயா? கெட்டவைக்கு உன் கரம் கொடுத்தாயா? கெட்டவைக்கு நடை போட்டாயா? என்ற இந்த கேள்விக்கு ஈமான் இழந்த உன்னிடம் தான் பதில் அதிகம் இப்போது சொல் எது ஊனம் உன் உடம்பா? இல்லை உன் மனதா ?

K. Fathima Risama Nintavur. SEUSL. வௌியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்