நிஜங்களை நினைவில் வைத்து நிழல்களை சுமந்து உறவின்றி நிற்கின்றோம் சொந்தமாய் சத்தமாய் உறவாய் உயிராய் "வாப்பா" என அழைத்திடும் உறவின்றி மௌனமாய் அழுகின்றோம்
சிறுவயதில் சிந்திய கண்ணீர் காலம் சென்றும் ஓயவில்லை அது ரத்த உறவின் பிரிவின் தாக்கம் என்பதால்
என் வயதின் பதின்மம் கடந்தது இருபதும் கடக்கிறது நாட்கள் சென்று - தான் ஏற்கும் பாத்திரம் மாறுபட்டாலும் வாப்பா என்று அன்பாக சொல்லிப் பார்க்கும் ஆசை இன்னும் நீங்கவில்லை
என் தந்தை பணத்தை விட்டுச் செல்ல செல்லவில்லை செல்வத்தை சேர்த்து வைக்கவில்லை ஆனால் பக்குவமான தைரியமான ஓர் சிறந்த தாயை எங்களுக்கு பரிசளித்துள்ளார்
கண்ணீரத்துளியில் காவியம் படைத்திட ஆசை இருப்பினும் அது அனுதாபம் தேடலாய் எடை போட்டு விடுவாரோ என்ற பயம் உள்ளத்தில்
தந்தையின்றி சில காலம் வாழ்ந்து பார் சமத்துவம் இன்றி தத்தளிப்பாய் - இவ்வுலகில்!!!
கருத்துகள்
கருத்துரையிடுக