கருகிய காவோலை

அந்தோ பரிதாபம் தவமாய்த் தவமிருந்து கருவாக்கி உருவாக்கி முத்தாய்ப் பெற்ற மகனால்-தாயும் பித்தாகிப் போன செய்தி கேளுமய்யா..

கருவில் சுமந்தவளை தெருவிலே விட்டதால் விதியின் சதியால் வீதியோரம் நாதியற்றுக் கிடக்கிறது ஓர் உடல்!!

பெத்த மகனை ஊரார் மெச்சிப் புகழ்கையிலே உச்சி குளிர்ந்த தாயிவளை பிச்சை எடுக்க வைத்து கொச்சைப் படுத்தி விட்டான்

புண்ணில் வேலைப் பாய்ச்சி எண்ணில்லாத வேதனையளித்து இறையின் கோரப் பார்வையினை அறியாப் பேடியாய் அவனும் ஓடிப்போய் விட்டான்

சொந்தமிழந்து சோகத்தினைச் சுமந்து ஒடிந்துபோன உள்ளத்தால் இடிந்துபோய் இருக்கிறாள் தனிமைத் துயரிலே துவண்டுபோய்க் கிடக்கிறாள்

சொத்தாய் ஈன்ற அன்னையின் சொத்தை இவனும் அனுபவிக்க இத்தாய் மண்ணில் மடிந்திடுவாள் பூமித்தாய் இவளை ஏந்திடுவாள்

காலங்கள் கரைந்திடவே நீயும் காவோலையாகிடுவாய் கருகிடக் காத்திரு கணங்களை கணக்கிடு

நிலாக்கவி நதீரா முபீன் புத்தளம்(புளிச்சாக்குளம்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெயியீடு: வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்