கற்பிழந்த சட்டம்

பட்டம் பெற்று வேலைக்காய்க் காத்து நிற்பவர்களை திட்டமிட்டு மட்டந்தட்டும் பசையொட்டிய பதவிக் கதிரையில் பணம்தின்னிக் கழுகுகள் கூட்டம்

 

பணத்தின் தரம் பார்க்கும் பரிவற்ற பாவிகளால் இலட்சியப் பட்டமும் இலட்சங்கள் இன்றி அலட்சியம் செய்யப்படும்

 

சட்ட அதிகாரிகளால் மேய்க்கப்படும் பட்டிகளான சிலரால் சலுகைகளும் சாக்கடையில் நாள்ப்பட்டப் பாவங்களாய் நாறிக் கிடக்கின்றன

 

சட்டப் பெண்ணின் கள்ளக் காதலனாய்க் காவல்துறையும் கறைபடிய ஆக்கிரமிப்பின் அதிகார வேட்கையில் அரக்கனை எதிர்க்கவும் பலமில்லை

 

பலிவேட்கை தீர்க்கும் கலிகாலமிதில் கற்றுக் கொண்ட நாகரிகத்தால் கெட்டுப் போனோரும் கூலிப்படையாகளாய்க் கூட்டமாய் செத்து மடிகின்றனர்

நிலாக்கவி நதீரா முபீன் புத்தளம் (புளிச்சாக்குளம்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்