காத்திருந்தாள் காரிகை

பைம்பூ ணணிந்த பவள மவள் தன்வேனிலான் எப்போழ்து வருவா னென சாரளம் வழி யேவிசும்பை நோக்கி விழிவை த்தாள்..

இரா நீள் வதை நிறுத்த வுமில்லை எசமா னவன் வரு கைதரவு மில்லை..

ஞெலுவன் ஏனும்தூது தருவா னென வெண் கதிரவனிடம் விளித் தாள்தன் வேசறவு களை கவி வடிவில்..

இலங்கணம் கொண்டு இடும்பை யெனை ச்சூழ இஷ்ட னவன் இங்கண்வர விளம்பம் ஏனோ? யென, இசைத்தாள் இசைமடந்தை இடர்களை இவ்விதமாக..

நாரிகை யவள் ஏக் கக்குரல் கேட்டு இராபட் சிகளும் விம்மா தித்தன சோக ம்கொண்டு..

வைகுசுட ரெரிந்திடவே.. இர வின்மீது விரசம்கொண்டு காத்திருந்தாள் காரிகை...!

ஸுமைஹா Godapitiya

கருத்துகள்