காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 25

"ஆஹ்.... இங்க பாருங்க அநியாயத்தை" என்று ராபர்ட் சொல்ல அங்கு பார்த்தால் இருட்டில் அங்கும் இங்கும் புரண்டு கில்கமேஷின் கைகள் கட்டிலுக்குள் மாட்டி இருக்க அவனது காலை ஜெனி இறுக்கமாக பிடித்து கொண்டிருந்தாள்.

வாயில் பிளாஸ்டர் ஒட்டி இருந்ததால் அவனால் பேசவும் முடியவில்லை அதேநேரம் கை கால்களை அசைக்கவும் முடியவில்லை. கண்களை இறுக மூடி இருந்த ஜெனி மெல்ல திறந்தாள். எல்லோரும் கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு இவர்களை பார்க்க அப்போது தான் நிலைமையை உணர்ந்து சட்டென விலகி கொண்டாள். மீண்டும் அவன் முனகளில் தான் வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டியது நியாபகம் வந்து அதை கழற்றி விட்டாள். பெரிய தர்மசங்கடமாகி விட்டது ஜெனிக்கு. அதன்பின்னர் தான் கில்கமேஷ் நிம்மதியாக மூச்சு விட்டான்.

"என்ன காரியம் பண்ணிட்டே டிடானியா... இருட்டில் உன்னை பார்த்ததும் எல்லோருமே பயந்துட்டோம்.." என்றாள் மீரா. அவள் சிரித்து கொண்டே

"பின்னே. உங்களில் யாரெல்லாம் பயன்தான் கொள்ளி என்னு கண்டுபிடிக்க வேணாமா?" என்றவளின் பார்வை சட்டென ப்ளூ பிரிண்ட் பக்கம் செல்ல அதை கணத்தில் எடுத்து வைப்பது போல் மறைத்து கொண்டாள் ஜெனி...

அவள் அதை பற்றி எதுவும் கேட்பதற்கு முன்னர் பேச்சை மாற்றி,

"ஆமா பேர்த் டே பார்ட்டி எப்படி இருந்தது.." என்று கேட்டாள்.

"ஒஹ்ஹ் அதுவா... ரொம்ப ஜாலியா என்ஜோய் பண்ணோம்.. அவளுக்கு நான் வரமாட்டேனோ என்னு ரொம்ப கவலை... நான் அங்கே போனதும் தான் சந்தோசமா இருந்தாள்.... நான் அப்போவே வீட்டுக்கு வந்துட்டேன்... உங்க யாரையும் காணும் அதான் இப்படி ஒரு திட்டம் போட்டு வெச்சிருந்தேன்.." என்று சொல்லி கலகலவென சிரித்தாள்.

அப்போது தான் ராபர்ட் கையில் கட்டுபோட்டிருப்பதையும் கண்டுகொண்டாள்.

"ஹலோ இது என்ன சேர் கைல கட்டு... வந்த அன்னிக்கே யார் கூடவாச்சும் வம்பு வெச்சிக்கிட்டீங்களா? இல்ல வழுக்கி விழுந்துட்டீங்களா?"என்று கேட்டாள்.

"ஓஹ்.அது அது வந்து ஆமா. வழுக்கி விழுந்துட்டேன்.." என்று சமாளித்து கொண்டே பல் இளித்தான்...

அப்போது கீழே லூதர் அங்கிளின் சத்தம் கேட்டது.

"அப்பா வந்துட்டாரு என்னு நினைக்குறேன். வாங்க எல்லோரும் கீழே போகலாம்." என்று அழைத்து கொண்டே டிடானியா முன்னே செல்ல இவர்களும் எழுந்து ஹாலுக்கு சென்றனர்.

"வாங்க வந்து உக்காருங்க.. சாரி.. ஒரு இம்போர்டன்ட் மீட்டிங் அவோய்ட் பண்ண முடியல்ல.. அதனால போகவேண்டியதாயிடுச்சு. சரி வீடு பிடிச்சி இருக்கா? என்ன சாப்பிடீங்க.." என்று விசாரித்தார்.

"அஹ்ஹ்... வீடும் வீட்டுல உள்ள ஆளுங்களும் ரொம்பவே பிடிச்சி இருக்கு.." என்று ராபர்ட் அவரிடம் சொன்னான்.

"ஆமா அங்கிள்.. ரொம்ப தாங்ஸ். அதோட டிடானியவும் எங்களை ஒரு வழி பண்ணிட்டா.." என்றாள் ஜெனி..

"என்னோட பொண்ணுதானே! அவ எப்பவுமே இப்படித்தான்..  நான் தான் கொஞ்சம் செல்லம் கொடுத்து வளர்த்துட்டேன்."என்றார்.

"ஆமா டிடானியாவோட அம்மா.... எங்கே. அவங்களை வந்ததில இருந்து நாங்க இன்னும் பாக்கவே இல்லியே." என்று மீரா கேட்க ஒரு மாதிரி முகத்துடன் டிடானியா ரூமுக்கு சென்றுவிட்டாள்.

"மன்னிச்சிடுங்க.. நான் ஏதும் தப்பா.."

"இல்ல இல்ல.. அதெல்லாம் ஒன்னும் இல்ல. அவளுக்கு அவ அம்மா என்னா உசுரு.. என்னோட மனைவி ஒரு விஞ்ஞானி. ஏதோ வேலை செய்ற இடத்துல யாரோ ஏதோ சொன்னாங்க என்று விட்டு. போன வருஷம் அவ தற்கொலை பண்ணிக்கிட்டா"என்றார். எல்லோரும் அப்படியே சாக் ஆகிபோயினர்.

"என்ன சூசைட் பண்ணிகிட்டாங்களா?"என ஆர்தர் கேட்க

"ஆமா... அவ லபோரடரில தூக்கு போட்டுக்கிட்டு இறந்துட்டா... அம்மாவோட இழப்பு டிடானியாவை ரொம்ப பாதிச்சது. அதில் இருந்து மீட்க நான் பட்ட பாடு..." என்று விட்டு பெருமூச்செறிந்தார்.

"சாரி. அங்கிள்.. நாங்க உங்களை கஷ்டப்படுத்திட்டோம்.." என்றான் ராபர்ட்... ஜெனி தன்னுடைய தாய் தந்தையரை நினைத்து சோகத்தில் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.

"சரிம்மா.. எல்லோரும் டின்னரை முடிச்சிட்டு தூங்குங்க..."என்று விட்டு அவரும் அவருடைய அறைக்கு சென்றார்.

"இவ்வளவு ஜாலியா இருக்குற டிடானியாக்குள்ள இப்படி ஒரு சோகம் இருக்கும் என்னு நான் நினைக்கவே இல்லை..

நான் போய் அவளுக்கு ஆறுதலாக ரெண்டுமூணு வார்த்தை பேசிட்டு வர்றேன்."என்ற மீரா மாடிக்கு சென்றாள்.

"என்னோட டிடானியாக்கு இப்படி ஒரு கஷ்டமா... விடமாட்டேன்.. இனி அவளை நான் அழவே விடமாட்டேன்." என்றான் ராபர்ட்.

"டேய்...அதெல்லாம் ஒரு பக்கம்  இருக்கட்டும். நீ  எனக்கு சொல்றே என்ற ஐடியாவை சொல்லேண்டா?"என்று அவன் காரியத்திலேயே கண்ணாக இருந்தான்.

ஜெனி எழுந்து வராண்டா பக்கமாக போய் விட்டாள். அவளையே பார்த்து கொண்டிருந்த கில்கமேஷ் அவனும் பின்னாடி சென்றான்.

அங்கே அவள் அழுது கொண்டிருந்ததை பார்த்ததும். இவனால் அதை தாங்கவே முடியவில்லை.என்ன யோசித்தனோ தெரியவில்லை அவளை பின்புறமாக அணைத்து ஒரு கையால் இடுப்பை பிடித்து கொண்டதோடு மறுகையால் கண்களை மூடிக்கொண்டு இறுக்கி அணைத்து கொண்டான். அழுது கொண்டிருந்த ஜெனி அப்படியே ஜடமாக நின்றாள்.

மீண்டும் வருவான்……. Sanfara.A.L.F வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்