சற்று நேர அமைதிக்கு பின்னர் தன் பிடியில் இருந்து ஜெனியை விடுவித்து கொண்ட கில்கமேஷ் அவளை முகம் பார்த்து,
எனக்கு புரியுது.. நீயும் உன்னோட அம்மா அப்பாவை ரொம்பவே மிஸ் பண்ணுறே... நமக்கு ரொம்ப பிடிச்சவங்க நம்ம கூட இல்லேன்னா அதோட வலி எப்படி இருக்கும் என்னு எனக்கும் தெரியும்......நாங்க எல்லாம் உன்கூட இருக்கோம். நீ எதுக்காகவும் கவலைப்படாதே!.. உனக்கு முன்ன பின்னே தெரியாத எனக்கு உதவுரதுக்காக நீ எவ்வளவு கஷ்டப்பர்ரே என்று எனக்கு தெரியும்... நீ ரொம்ப நல்லவள் ஜெனி நல்லவர்களுக்கு எப்பவுமே கடவுள் துணை இருப்பார்.. என்றான்.
"ம்ம்"
"இப்போ போய் தூங்கு.. நாளைக்கு நமக்கு நிறைய வேலை இருக்கு."என்றுவிட்டு வீட்டுக்குள் செல்ல திரும்பினான். திடீரென ஜெனிக்கு ஒரு யோசனை.. அதை இப்போதே கேட்டுவிடவேண்டுமென்று ஆர்வத்தில்.
"ஆ...அது.. கில்கமேஷ் ..ஒரு நிமிடம்..."
"என்ன??"
"என்கிடுவோட அந்த மோதிரத்தை வெச்சு ..வேறு யாருக்கும் கூட உயிர் கொடுக்க முடியுமா?"
அவள் எதற்காக இப்படி கேட்கிறாள் என்று அவன் அறியாமல் இல்லை.
"இல்ல ஜெனி...என்கிடுவுக்கு நான் கொடுத்த மோதிரம். சூரியக்கடவுள் சாமாஸ் அவருடைய ஜீவன நாட்டில் அட்டூழியம் செஞ்சிக்கிட்டு இருந்த ஹம்பாபாவை அழிச்சதற்காக பரிசாக வழங்கியது.. அதை நான் என்கிடுவுக்கு கொடுத்தேன்..... உயிரோட இருக்கும் போது யாரெல்லாம் அந்த மோதிரத்தை அணிந்து கொள்வார்களோ அவங்களை மட்டும் தான் அதற்கு உயிர் கொடுக்குற சக்தி இருக்கு.."என்றான்.
"அப்படியென்றால்.. அந்த லாரன்ஸ் அதோட மித்ரத் ரெண்டுபேரும் அதை போட்டு இருந்திருக்காங்களே?"என்று கேட்டாள்.
"போட்டு இருக்கலாம்.. ஆனா அவங்க யாருக்கும் இந்த உண்மை தெரியாதே.. எப்படியோ மித்ரத் மட்டும் என்கிடுவுக்கு உயிர் கொடுக்க அந்த மோதிரத்தை பயன்படுத்தி கொள்ள முடியும் என்று அறிந்து கொண்டுள்ளான். ஆனா இந்த மோதிரத்தை பற்றிய முழு ரகசியத் தையும் நான் குகையில் இருந்த போது அறிந்து கொண்டேன்.."என்றான்.
"முழு உண்மையும் தெரியரத்துக்குள்ள நாம அந்த மோதிரத்தை எடுத்துடனும்... சரி வா உள்ளே போகலாம்."என்று ஜெனி யோசித்து கொண்டே கில்கமேஷையும் அழைத்து கொண்டு சென்றாள். டிடானியாவின் அறைக்கத்தவு பூட்டப்பட்டு இருந்தது. போகிற வழியில்,
"ஹே மீரா. நீ அவகிட்ட பேசினாயா?"என்று கேட்டான் ராபர்ட்.
"இல்லடா.... நான் போறதுக்கு முதலே உள்ளே போய் லாக் பண்ணிக்கிட்டா.. அவளை தொந்தரவு பண்ண வேண்டாமே என்னு விட்டுட்டேன். "என்றாள் மீரா.
அப்போது கில்கமேஷ் மற்றும் ஜெனி இருவரும் மேலே வந்து கொண்டிருந்தனர்.
"மீரா! ஆர்தர் !ராபர்ட்... மூணு பேரும் என்ன பண்ணுறீங்க...?" என்று கேட்டுக்கொண்டே அவர்களை நெருங்கி வந்தாள் ஜெனி
"வாங்க மேடம் உங்க ரெண்டுபேரையும் தான் தேடிக்கிட்டு இருந்தோம்.. இல்லேன்னா நாளைக்கு பேப்பர்ல விளம்பரம் கொடுக்க தான்.."என்றாள் மீரா..
"ஆரம்பிச்சிட்டியா... வா நேரமாச்சு நம்ம ரூமுக்கு போவோம்... குட் நைட் காய்ஸ்..."என்று விட்டு மீராவை தள்ளிக்கொண்டே சென்றாள் ஜெனி.
அவளையே பார்த்து கொண்டிருந்த கில்கமேஷை பார்த்து ராபர்ட் முகத்துக்கு நேரே கையை ஆட்டி
"ஹலோ.... நம்ம ரூமு இந்த பக்கம் "என்றான். அவனும் சிரித்து கொண்டே சென்றான்.
மறுநாள் விடிந்தது.....
எல்லோருக்கும் முதல் தயாராகி ராபர்ட் காலையுணவை உண்டு கொண்டிருந்தான். அப்போது காலேஜுக்கு போக ரெடி ஆகிக்கொண்டு வந்தாள் டிடானியா.
"அட... ஆச்சர்யமா இருக்கே... ரொம்ப சீக்கிரம் எழுந்து ரெடி ஆகி இருக்கீங்க... என்ன விசேஷம்...?"என்று கேட்டுக்கொண்டே அவளும் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்து கொண்டே கேட்டாள்.
"அதுவந்து. .ப்ரொஜெக்ட் விஷயமா இன்னிக்கு முக்கியமான ஒரு வீ ஐ பீ யை மீட் பண்ணனும்...அதான் இப்படி "என்றான்..
அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே மற்றவர்கள் கொட்டாவி விட்டு கொண்டும் .சோம்பல் முறித்து கொண்டும் கீழே வந்தனர். இவனை அறையில் காணவில்லை என்பதால் பிரேஷ் அப் ஆகாமல் கூட பதறியடித்து கொண்டு வந்தனர். ஒருவேளை ராபர்ட் மித்ரத் வரசொன்னத்தை மறந்து எங்காவது போய் இருப்பான் என்றே எல்லோரும் நினைத்தனர்.
"மத்தவங்களும் வந்துட்டாங்க..."என்று திரும்பியவள் கண்ணில் கடிகாரம் தென்பட
" ஒஹ்ஹ் மை காட்,
"எனக்கு காலேஜுக்கு போக நேரமாச்சு... உங்களை ஈவினிங் சந்திக்கிறேன் காய்ஸ்.. பை..."என்றவள்.
சான்வீஜ் ஒன்றை கையில் எடுத்து கொண்டு கடித்து கொண்டே ஓடினாள்.
டைனிங் டேபிள் கிட்ட வந்த இவர்கள் ராபர்ட்டை ஆச்சர்யமாக பார்த்தனர். அதற்குள் ஆர்தர்.
"எப்படிடா உன்னால மட்டும் கோர்வையா பொய் சொல்ல வருது?"என்று வியந்து கேட்டான்..
"என்னடா ஒளர்ர...?"என்று கேட்டுக்கொண்டே கைகழுவி தண்ணீர் குடித்தான் ராபர்ட்.
"அதான்.. ப்ரொஜெக்ட் விஷயமா யாரையோ பாக்க போறியாமே.."என்று கிண்டலடித்தான்.
"ஒஹ்ஹ் அதுவா... மித்ர்த் கிட்ட வேலையில ஜோய்ன் பண்ண போறேன் என்னு சொல்லலாமா.. அதான் ..வாயில வந்தத சொன்னேன்."என்றான்.
"உன்னை என்னவோ நினைச்சோம்.. நீ பெஸ்ட் என்னு நிரூபிச்சுட்டே.. ஆல் தி பெஸ்ட் ராபர்ட்."என்று ஜெனி அவனுக்கு வாழ்த்து சொன்னாள். அவனும் எல்லோரிடமும் இருந்து விடைபெற்று மித்ரத் ஆபீசுக்கு சென்றான்.
கருத்துகள்
கருத்துரையிடுக