கில்கமேஷ், ஆர்தர் மற்றும் மீராவை அழைத்து கொண்டு ஜெனி அவர்களின் அறையில் ஒன்று கூடினார்கள்.
"நேற்று கொண்டு கொண்டுவந்த ப்ளூ பிரிண்டை எடு ஆர்தர்..."என்று ஜெனி சொல்ல அவனும் தேட ஆரம்பித்தான்..
"எங்க வெச்சிருக்க. இங்க எங்கேயும் காணும்.."என்றதும் தான் அவளுக்கு நியாபகம் வந்தது..
"ச் சோ.... நான் மறந்தே போய்ட்டேன்.. நேத்து நாம அந்த ரூம்ல இருந்தோம்லே... டிடானியா வந்தப்போ நான் தான் எடுத்து அந்த பெட்டிக்கு அடியில வெச்சேன்... இரு நானே போய் எடுத்துட்டு வர்றேன்."என்றவள் எழும்பி ஆண்களின் அறைக்கு சென்றாள்.அதை எடுத்து வந்து தரையில் விரித்தாள்.
"எனக்கொரு சந்தேகம் இந்த மேப் கரெக்ட் தானா.. இல்லே ஏன் கேக்குறேன்னா.. முழுசா தோண்டி முடிக்காத இடத்தொட ப்ளூ பிரிண்ட் எப்படி கிடைக்கும்."என்று கேட்டாள் மீரா.
அகழ்வாராய்ச்சி நடக்கபோற இடத்துக்கு என்று அண்ணளவாக ஒரு ப்ளூ பிரிண்ட் போட்டு வைத்திருந்தனர். ஏனென்றால் அந்த இடத்தில் அரைவாசி பகுதி ஆற்று மண்ணினால் மூடப்பட்டு இருந்தது. ஏற்கனவே தோண்டப்பட்ட இடங்களின் அமைப்பினை வைத்து அந்த மேப்பினை அமைத்திருந்தனர். இதற்கிடையில் ஆராய்ச்சியாளர்கள் தங்கும் இடம், ஊழியர்கள் தங்குமிடம், கருவிகள் அனைத்தும் போட்டு வைக்க ஒரு அறை அதோடு மித்ரத் தனக்கென்று ஓய்வெடுக்க ஒரு கூடாரத்தையும் அருகில் உள்ள நிலத்தை வாங்கி அதில் ஆபிஸையும் அங்கு அமைத்து இருந்தான். அதோடு எங்கும் தவறு நடந்துவிடாமல் தடுக்கவும், வெளியாட்கள் நடமாட்டம் இருந்தால் அதை கண்காணிக்கவும் ஆங்காங்கே தனது ஆட்களை போட்டு வைத்திருந்தான். இந்த விடயங்களை எல்லாம் ஜெனி எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கினாள்.
"சரி நம்ம அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?"என மீரா கேட்டாள்.
"மோதிரத்தை எடுத்துவர்ரே பொறுப்பை நாம ராபர்ட் கிட்ட கொடுத்து இருக்கோம்.. பாவம் அவனும் தனியா எப்படி சமாளிக்க போறானோ தெரியல்ல... ஆனா நாம எப்படியாவது அகழ்வாராய்ச்சி குழுவோடவோ இல்லேன்னா வேலை செய்றவங்க போலவோ உள்ளே நுழைஞ்சாகனும்.."என்றாள்.
"நான் நினைக்கிறேன் இது கொஞ்சம் ரிஸ்க்கான வேலை என்னு... தப்பித்தவறி மித்ரத் நம்மள பார்த்துட்டா அவ்வளவு தான்..."என்றான் ஆர்தர்.
"அப்படியில்லை... எல்லா நேரமும் மித்ரத் அங்க இருக்க மாட்டான். அதனால நானும் மீராவும் அகழ்வாராய்ச்சி குழுவினர் கிட்ட பேசி... உள்ளே வந்துடுவோம்..."என்றாள்.
"அப்போ நாங்க என்ன பண்ணுறது?"என்று கேட்டான் கில்கமேஷ்.
"நீயும் ஆர்தரும் அங்க வேலை செய்றவங்க போலத்தான் என்டர் ஆகணும்..."என்றாள்.
"நாம ஏன் எல்லோரும் ஒரே குழுவாக செயற்பட முடியாது..."என்று கேட்டான் ஆர்தர். அதற்கு மீரா.
"காரணம் இருக்கு..... ஒருவேளை நம்மள்ள ஒரு டீம் மாட்டிக்கிட்டாலும் அடுத்த டீம் வேலையை தொடரனும்... அதுக்காக தான் ஜெனி இப்படி சொல்றா"என்றாள்.
"சரி ஆர்தர்! கில்கமேஷ்! ரெண்டுபேரும் இப்போவே புறப்பட்டு அந்த பகுதிக்கு போங்க... சீக்கிரம் வேலை முடியனும் என்பதற்காக எப்படியும் ஆளுங்களை சேர்த்துக்கொள்வார்கள்... இந்தாங்க.."என்று இருவரின் போனையும் கையில் திணித்து
"ப்ளூ பிரிண்ட் படி இந்த பக்கம் தான் மித்ரத் ஆபீஸ் இருக்கு.. அதனால மற்ற பக்கம் இருக்குற கதவு வழியா போங்க எது நடந்தாலும் எங்களுக்கு இன்போர்ம் பண்ணிடுங்க.."என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
அவர்கள் போகும் போது மீரா ஆர்த்தரை கூப்பிட்டு
"டேய்... பார்த்து பத்திரம்.."என்றாள். உள்ளூர ஏற்பட்ட சந்தோஷத்தை வெளியே காட்டிகொள்ளாது அவனும் சென்று விட்டான்.
"வா மீரா.. நாம ஒரு இடத்துக்கு போகணும்.."என்று அவர்களும் தயாராகி புறப்பட்டனர்.
*********
"சேர்...சேர்...!!!"
"என்ன வேணும் யார் நீ!"
"என்னை மித்ரத் சேர் வந்து மீட் பண்ண சொன்னாரு.. சார் இருக்காரா?"என்று கேட்டான் ராபர்ட்.
"இரு கேட்டு வர்றேன்... "என்று திரும்பியவனை மறுபடி அழைத்து
"அவரோட பீ ஏ வந்து இருக்கேன்னு சொல்லுங்க.. சாருக்கு புரியும்." என்க முன்னாடி போனவன் இவனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு உள்ளே சென்றான். இவனும் டை மற்றும் சேர்ட் காலரை சரி செய்து கொண்டிருக்க முதலில் உள்ளே போனவன் வெளியே வந்து
"சார் உங்களை உள்ளே வரச்சொன்னாரு"என்றான். அந்த பேச்சில் பணிவு தெரிந்தது.
அதன் பின் ராபர்ட் மித்ரத் அறைக்கு சென்றான்...
"பரவாயில்லை மறக்காம சரியான நேரத்தில் தான் வந்து இருக்கே... அது சரி உன் பெயர் என்ன சொன்னே..."என்று கேட்டான் மித்ரத்.
"ராபர்ட், சேர்"
"ஓகே ராபர்ட்... இனி நீதான் என்னோட பீ ஏ... என்கூடவே தான் இருக்கணும்... நான் என்ன சொன்னாலும் மறுபேச்சு பேசாம அதை பண்ணனும்" என்றான் மித்ரத்.
அந்த நேரத்தில் ராபர்ட் மித்ரத் கையில் அல்லது அந்த அறையில் எங்காவது மோதிரம் தென்படுகின்றதா என நோட்டமிட்டு கொண்டிருந்தான். மித்ரத் ஏதோ சொல்லி இருக்க வேண்டும் அதை கவனியாது இவன் தேடல் தொடர கொஞ்சம் கனத்த தொனியில் மித்ரத்.
"உன்கிட்ட தான் பேசுறேன் ராபர்ட்.. என்ன தேடிக்கிட்டு இருக்கே?"என்று கேட்க கொஞ்சம் தடுமாறி போன ராபர்ட் .
"அதில்லை சேர்... இங்கே எங்கேயும் உங்க போட்டோ ஒன்றை கூட காணல்லியே...அது தான் யோசிச்சேன்." என்று சமாளித்தான் ராபர்ட்.
அவனுடைய கோமாளி தனத்தை எண்ணி சிரித்தான் மித்ரத்.
கருத்துகள்
கருத்துரையிடுக