கிழட்டு விவசாயி

விட்டுவிடு என் சோகங்கள் என் மனத்திரையில் தேங்கி நிற்கட்டும் அதில் படிந்திருக்கும் துரோகத்தின் துகள்கள் என் இதயத்தை கிழித்தெறியட்டும்

என்ன பார்க்கிறாய் தள்ளாடும் முதுமையில் மழைக்கு குடைபிடித்து மனைவியுடன் கிழவன் எங்கு செல்ல நாடுகிறான் உன் உள்ளத்தின் உதயம் என் இதயத்தில் கேட்கிறத

புரிந்துகொள் வாலிபனே வாலிபம் நிலையல்ல மனிதனில் முதுமை குறையல்ல நான் கிழவன்தான் ஆனால் ஏர் பிடித்த உழவன் பிள்ளையின் துரோகத்திற்கு பெற்றவன் என்றும் பலியல்ல

என்ன கிழவன் உளறுகிறேனா இது உளறல் அல்ல வாலிபனே உளக் குமுறல் கட்டிய மனைவிக்காய் பெற்றவளை தூக்கியெறிந்த பிள்ளைக்கு பெற்றவன் நானிடும் சாபம்

வளர்த்த குற்றத்திற்கு வளர்ந்த மகன் கழுத்தை நெரிக்க வாழ்க்கை போராட்டத்தை எதிர்த்து நிற்கும் ஒரு கிழவன் எனது சாபம்

என்ன உயர்த்திய புருவம் இறங்க மறுக்கின்றதா வற்றிய தொண்டை உமிழ்நீர் இன்றி சாவதற்காய் பாய் விரிக்கின்றதா சாகக்கிடக்கும் கிழவனுக்கு திமிர் எதற்கு என உன் உள்ளம் வெகுண்டெழ துடிக்கின்றதா

புரிந்துகொள் எவனையும் நம்பாது இறைவன் துணை கொண்டு ஏர்பிடித்த கரம் இது ஆணவமாய் சாவோம் எவனுக்கும் அடிமையாய் வாழோம்

நான் கவிஞன் வௌியீடு: வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்