சூழ்ந்துவரும் ஏழ்மையில் எள்ளையும் ஏழாகப் பிரித்து உண்டு பாதி வயிற்றோடு படுத்துறங்கும் பிஞ்சுகள்
ஒருசான் வயிற்றை உலுப்பும் பசியில் மூன்று வேளையை ஒரு வேளையாக்கி சிக்கனத்தை சேமித்திடும் சிறு வாழ்வு தான்
பொல்லாத கைகளும் பொறுப்புக்களை ஏற்றதால் பட்டுத் துணியிலும் பஞ்சணை மெத்தையிலும் உல்லாச மாளிகையில் உலுத்தர் கூட்டம்
பட்டினியில் பலவுயிரும் பாரினிலே பரிதவிக்க பெட்டியிலே பலகோடி பொத்தி வைப்பதில் பயன் உண்டோ?
காசுக் கடதாசிகள் கைசேரா கைவிரல்களும் விஷமான விலைவாசியில் கருகிடும் கனவுகளோடு கரைந்திடும் கழிக்கப்பட்டவர் வாழ்வு
கருத்துகள்
கருத்துரையிடுக