ஜனநாயகம் ஓர் இறை நிராகரிப்பா ?????

ஜனநாயகம் என்பது சமகாலத்தில் அரசியல் மொழியாக விளங்குகின்றது. ஜனநாயகம் இஸ்லாமிய ஷரீஅத்தோடு நேரடியாக தொடர்புபடாத விடயமாக இருப்பினும் இஸ்லாமிய சமூகவியல் கலைகளில் மிக ஆழமாக ஆராயப்படும் ஓர் கலையாகும். சமூகவியல் அறிஞர்களான மாலிக் பின் நபி, தாஹா ஜாபிர் அத்வானி, நாதிர் நூரி போன்றோரை இதில் குறிப்பிடலாம்.

நவீன காலத்தில் இஸ்லாமிய சமூகவியல் அடிப்படையில் இஸ்லாமிய அரசியலை ஆராய்கின்றவர்களாக அஹ்மத் அர் ரய்ஸுனி, ராஷித் அல் கான்னூனி ஆகியோரைக் குறிப்பிடலாம். சுமார் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் ஜனநாயகம், குப்ர் என்ற வாதமானது பரவலாக அரபுலகிலே பரவியிருந்தது. இக்கருத்தை முன்வைத்தவர்களில் இரு பிரிவினர் உள்ளனர்.

  1. முஸ்லிம் ஆயுத வன்முறை குழுக்கள்.
  2. இஸ்லாமிய கிலாபத்தை முன்வைப்பதற்கு போராடிய இஸ்லாமிய இயக்கங்கள்.

மேற்படி குழுக்கள் ஜனநாயகம் குப்ர் என்பதற்கு சில நியாயங்களையும் முன்வைத்துள்ளனர். அந்த நியாயங்களையும் அதற்கான பதில்களையும் பின்வருமாறு நோக்கலாம்.

01: சட்டம் இயற்றுகின்ற அதிகாரம் அல்லாஹ்வுக்கு இருக்கின்ற போது ஜனநாயகம் அதனை மக்களுக்கும், பாராளுமன்றத்திற்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இருப்பதாக சொல்கிறது. அப்படி செய்வது அல்குர்ஆன் பார்வையில் குப்ரானது.

"தவ்ராத்தை நாம் அருளினோம் அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தது. இறைவனுக்கு கட்டுப்பட்ட நபிமார்களும் யூத வணக்கசாலிகளும், மேதைகளும் அல்லாஹ்வின் வேதத்தை பாதுகாக்கக் கட்டளையிடப்பட்டதாலும் அதற்குச் காட்சியாளர்களாக இருந்தாலும் யூதர்களுக்கு அதன் மூலமே தீர்ப்பளித்து வந்தனர். எனவே மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் தாம் காபிர்கள்."

"அவர்களுக்கு நாம் அதில் கண்ணுக்கு கண், மூக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்கு பல் மற்றும் காயங்களுக்கு பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் சேர்த்து அவர்களுக்கு விதி ஆக்கினோம். பாதிக்கப்பட்ட யாராவது அதை மன்னித்தால் அது அவர்களுக்கு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்." இன்ஜீலுக்குரியோர் அதில் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்கட்டும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் குற்றவாளிகள்." (அல்மாயிதா :44, 45, 46) ஆகிய வசனங்கள் குறிப்பிடுகின்றன.

பதில் : மேற்படி வசனமானது அல்லாஹ்வின் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் வேறு எவருக்கும் பங்கில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது. ஆயினும் இவ்வசனத்தை வைத்து ஜனநாயகம் குப்ர் என்று வாதிட முடியாது. ஏனெனில் மேற்படி சட்ட வசனமானது இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படைச் சட்டங்களை உருவாக்குவதற்கான இறை அதிகாரத்தையே குறிப்பிடுகின்றது. ஜனநாயகமோ பாராளுமன்றமோ மார்க்க விவகாரம் குறித்த சட்டங்களை அல்லது அது விடயத்தில் ஷரீஆ ஏற்கனவே உருவாக்கியிருக்கின்றது. சட்டங்களுக்கு மாற்றமாக புதிய சட்டங்களை உருவாக்குவது.

02 : பெரும்பான்மை வாதம்.

ஜனநாயகத்தில் ஏதாவது ஒரு விவகாரத்தில் பெரும்பான்மையோரின் கருத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையே ஜனநாயகம் கொண்டிருக்கின்றது. பெரும்பான்மை என்பதால் சரியானதாக இருக்க முடியாது. அதே போன்று அல்குர்ஆனும் பெரும்பான்மை வாதத்தை ஆதரிக்கவில்லை.

பதில் : மேற்படி வாதமானது பிழையாகப் புரியப்பட்ட உள்ளது . அதாவது மார்க்க விவகாரங்களில் சரி, பிழை என்ற நிலைப்பாடு சிறுபான்மை பெரும்பான்மை என்ற அளவுகோலில் நிர்ணயிக்கப்பட முடியாது. அதற்கான அளவுகோல் சாத்தியம் என்பதே என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. உலகியல் விவரங்களை பொறுத்தவரையில் நல்லதொரு தீர்வை அடைவதற்கு பெரும்பான்மைவாதம் பொருத்தமுடையதாகும். இவ்வழிமுறையையே அறிவுக்கும் ஏற்புடையதாகவும் மட்டுமன்றி இஸ்லாமிய வரலாற்றிலும் பெரும்பான்மைவாதம் இருந்துள்ளது என்பதற்கு பின்வரும் நிகழ்வுகள் சான்றுகளாகும்.

  1. உஹது போர் இடத்தை தெரிவு செய்தமை.
  2. அபூபக்கர் ரலி அவர்கள் கலீபாவாக தெரிவு செய்யப்படல்.
  3. உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) அவர்களை தெரிவு செய்வதற்கு செய்த ஏற்பாடு.
  4. தேர்தல் முறையை விட ஷுறா சிறப்பானது

பதில் : ஷுறாவைப் பற்றி அல்குர்ஆனில், "முகம்மதே! அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும், கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உண்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீர்களாக அவர்களுக்கு பாவமன்னிப்பு தேடுவீராக காரியங்களில் அவர்களுக்கு அவர்களுடன் ஆலோசனை செய்வீராக உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக தன்னையே சாந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கின்றான்."

ஆல இம்ரான் 159ம் வசனம், தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர்கள் நினைக்கின்றார்கள் நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்? என்று கேட்டான். ஷுஅறா 35 ஆகியவை ஷுரா பற்றி குறிப்பிடுகின்றது. ஷுரா என்ற நடைமுறை அல்குர்ஆனில் வலியுறுத்தப்பட்டு இருப்பதோடு அது எந்த வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டளை இஸ்லாம் வழங்கவில்லை. இதனை மனித தெரிவுக்கு விட்டுவிட்டது. ஆகவே ஷுறா நடைபெறுகின்ற எந்த பொறிமுறையையும் அங்கீகரிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ளலாம். மட்டுமன்றி நவீன காலத்தில் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்வதற்கான மிகச் சிறந்த வழிமுறையாக ஜனநாயகம் பெற்றுத்தந்த தேர்தல் முறையை குறிப்பிடலாம்.

03 : சிறுபான்மை நாடொன்றில் ஐனநாயக கட்டமைப்பில் பங்கேற்கலாமா ?????

சில போதும் அரசியல் ஜனநாயக வழியை பின்பற்றுகின்ற நாடுகளில் இஸ்லாமிய ஷரீஆவிற்கு முறணான விடயங்கள் அங்கீகரிக்கப்பட்டு இருக்கலாம் உதாரணமாக குற்றவியல் சட்டத்திற்கு நீதிமன்ற முறை அரசியலமைப்பின் வேற்று மதங்களுக்கான முன்னுரிமை போன்றவற்றை குறிப்பிடலாம். "பின்னர் நீங்கள் உங்களை சேர்ந்தவர்களை கொலை செய்யாதீர்கள். உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீட்டில் இருந்தே விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும் வரம்பு மீறலிலும் உதவி கொண்டீர்கள். உங்களிடம் யாரேனும் கைதியாக வந்தால் உங்கள் வேதத்தில் உள்ள படி ஈட்டுத் தொகையை பெற்றுக் கொள்கிறார்கள். அதே வேகத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீட்டில் இருந்து வெளியேற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று மறு பகுதியை மறுக்கிறீர்களா???? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை."

சூரா பகராவின் 85ஆவது வசனத்தின்படி இதனடிப்படையில் கூடாது. ஆகவே ஜனநாயகத்தில் பங்கு கொள்ள முடியாது. அடிப்படையில் இந்த வாதம் சரியானதே ஆனால் இதற்கான பதிலை பின்வருமாறு கூறலாம்

فاتقو الله ما ستطعتم اخد الضررين المشقة تجلب التيسر

எனவே மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் வைத்து பார்க்கின்றபோது ஜனநாயகம் ஓர் இறை நிராகரிப்பு அல்ல என்பது நமக்குப் புலனாகின்றது.

04 : முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுதல்.

இவ்வசனங்களில் (12: 74 - 76) முக்கியமான ஒரு படிப்பினை இருக்கிறது. யூசுப் நபியவர்கள் ஒரு நாட்டில் அமைச்சராக இருக்கின்றார்கள். அந்த நாட்டின் மன்னரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அதை செயல்படுத்தக் கூடிய பொறுப்பிலும் இருக்கின்றார்கள். அதே நேரத்தில் தமது நாட்டில் உள்ள சட்டப்படி தமது சகோதரரை அவர்கள் கைப்பற்றவில்லை.

எனவே தான் தமது சகோதரர்களிடம் உங்கள் நாட்டில் தேர்தல்கள் கூடிய தண்டனை என்ன ??? என்று கேட்கிறார்கள் அவரை பிடித்து கொள்வதே அதன் தண்டனை என்ற பதிலை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் தம் சகோதரரை பிடித்துக் கொள்கிறார்கள்.

மன்னரின் சட்டப்படி சகோதரரை அவரால் எடுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது என்ற வாசகம் ஒரு மன்னரின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கலாம் என்பதற்கு சான்றாக இருக்கின்றது.

மேலும் தம் சகோதரரை தம்முடன் சேர்த்து வைத்துக் கொள்வதற்காக தன் யூசுப் நபி உடைய சமுதாயத்தில் சட்டம் என்னவென்று கேட்டு அதை பயன்படுத்துகின்றார்கள். மற்றவர்கள் விஷயத்தில் தமது தந்தை வழியாக கிடைத்த சட்டத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதும் இவ்வசனங்களில் இருந்து தெரிகிறது.

எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி புரியும் நாடுகளில் மார்க்கம் வணக்கம் தொடர்பான விஷயங்களைத் தவிர்த்து மற்ற சட்டங்களில் அந்த ஆட்சி கற்றுக்கொள்வதும் அதை நடைமுறைப் படுத்துவதும் குற்றமில்லை என்பதற்கு இந்த வசனங்கள் சான்றாக உள்ளன அல்லாஹ்வின் சட்டங்கள் இல்லையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் யாவும் அதற்கான ஆட்சி அதிகாரம் கிடைக்கும் போது செயல்படுத்த வேண்டியவையாகும் எனவே இந்த வசனத்தை அதற்கு முரணாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

எனவே ஜனநாயகம் என்பது ஓர் இது இறை நிராகரிப்பில்லை என்பதை மேற்கொண்ட ஆதாரங்களின் அடிப்படையில் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

NAFEES NALEER ( IRFANI, SEUSL) EDITOR OF VIYOOHAM MAGAZIN வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்