வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உறவு.... வாழ வேண்டிய காலத்தில் தன் வாழ்க்கையை..... வாரிசுகளுக்காக அர்ப்பணிக்கின்ற ஓர் உன்னத உறவு தந்தை
பச்சிளம் பாலக வயதில் நடப்பதற்கு சுவரோடு போராடுகின்ற வேளையில்... தன் கையை ஊன்று கோலாக கொடுத்து -தன் பிள்ளைக்கு நேர் வழி காட்டுகின்ற ஓர் உன்னத உறவு தந்தை
தன் பட்டினியையும் பொருட்படுத்தாமல் பகலோடும் இரவோடும் போராடி தன் கஷ்டத்தை மறந்து தனக்கான உறவுகளுக்கு தினம் தினம் உதிரத்தை வேர்வையாக்கி வாழ்க்கையோடு போராடும் ஓர் உன்னத உறவு தந்தை
பாலர் வகுப்பு முதல் பாடசாலை வாழ்க்கை வரை தன் வாரிசுகளுக்கு தன் கையால் பணம் கொடுத்து..... தன் துன்பம் மறந்து பிறர் துன்பம் போக்க தன்னையே அர்ப்பணித்து தன்னை விட தன் பிள்ளையை மேலாக்க பொறாமையின்றி துடிக்கும் ஓர் உன்னத உறவு தந்தை
பாடசாலை காலம் முடிந்து உழைக்க வேண்டிய வயதிலும் உனக்காக நான் இருக்கிறேன் உன் வாழ்க்கையை நான் பார்ப்பேன் நீ உன் கல்வியை தொடர் என்று உரிமையாக கூறும் ஓர் உன்னத உறவு தந்தை
தந்தை!!!!! எழுத்துக்களால் வர்ணிப்பதற்கு வெறும் உறவு அல்ல உயிரோடு கலந்த உதிரம் ஒவ்வொரு தந்தையையும் போற்றுவோம் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எம் தந்தை என்று உரிமையோடு கொண்டாடுவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக