கறுமையெனும் இருளுக்குள் பௌர்ணமி நிலவாய் ஜொலித்த நாமின்று வானிழந்த நிலவாய் அமாவாசை போல் ஆனதேனோ?
மங்கையின் கண்ணாடி வதனம்! அந்நிய ஆடவர் தம்மை வசியம் செய்திட கூடாதென்று பல காலம் போர்வைக்குள் அணையாது ஒளிர்ந்திட்ட மெழுகுவர்த்திகள் !
எவனோ ஒருவன் செய்த திரை மறை காரியம் பௌர்ணமிகளை அமாவாசைகளாக்கி ஒளியிழக்கச் செய்திட்டது
இனி இறைவன் கையில் தீர்ப்பு! இப்படியோ இவ் உலகம் அழிந்திடுமோ? அல்லது சீரழிந்திடுமோ?
கருத்துகள்
கருத்துரையிடுக