இருபதைத் தொட்ட இளசுகளும் அறுபதைத் தொட்ட பழசுகளும் இங்கிதமே இல்லாமல் இயல்களைத் தொலைத்த இழிவுச் செயலை இயம்பிட்டால் இனித்திடுமா?
முகம் புதைத்து முகமூடியணிந்து முகப் புத்தகத்தில் முழுநாளும் மூழ்கிக் கிடத்தல் முத்துக் குளிக்கும் செயலாகிடுமா?
நாகரிகத் தொட்டிலில் ஊஞ்சலாடும் தொழிநுட்பத்தில் நித்திரை தொலைத்து நட்டநடுத் தெருவிலும் நாறிக் கிடக்கும் நம்மவர் சமுதாயம் நாளும் திரையினிலே மூழ்குதல் தகுமோ?
கருத்துகள்
கருத்துரையிடுக