நிலவும் நானும்

இருளாடை அணிந்த அந்தி மகளும் உறங்கிக் கிடந்த வேளை அதன் கவின்காண களைப்புற்றுக் கடலோரம் சென்றேன்

இருட்டுப் பிணியை விரட்டும் மருந்தாய் ஆகாயக் குளத்தில் நீராடும் அன்னமாய் நள்ளிரவு நாடகத்தில் நிலாப்பெண் நீந்தினாள்

அந்தகார அகல்விளக்காய் சுந்தரத் தாரகைகள் முந்தியடித்துக் கண்ணடிக்க வானத்து மீன்களை அள்ளமுடியா மனதும் அலுத்துக் கொண்டது

தண்மதி கவிமொழிய தனியழகை நான் சுவைக்க தென்றலும் தூதுரைத்து மேனிதழுவி மெய்சிலிர்க்க மதுவின்பமாய்ப் புதுவின்பம் உள்ளத்தில் உயிர்க்கொண்டது

நிலாக்கவி நதீரா முபீன் வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்