போகும் வழியில் புதையல் ஒன்று...!!!!!

மனம் இருந்ததால் தான் பணம் இல்லாது போனதோ! எனத் தெரிவில்லை.

குணம் இருந்ததால் தான் பயம் இல்லாது போனதோ! எனத் தெரிவில்லை.

பணமும் பயம் இருந்ததால் தானே சிலரிடம் மனமும் குணமும் இல்லாது போனதோ! எனத் தெரியவில்லை.

பணமும் பயமும் இன்று வாழ்வினைத் தீர்மானிக்கின்றதால் தான் புன்னகைகள் யாவும் புதினம் பார்த்தபடி செல்கின்றன சில காலங்களுக்கு இன்றுவரை.

வக்கணையாய் பேசிவிடலாம் எனப் பேசிவிடாதீர்கள்! பேச்சின் ஆழம் அறிந்தால் அடியோடு அழிந்து போய் விடுவீர்கள் நீங்கள்.

யோசித்து வாழப் பழகிக் கொள்ளுங்கள் வாழ்கையில் வரலாறு காணாது வெற்றி கண்பீர்கள்.

நான்! வெற்றி காணாவிடினூம் தோல்விகளை தோள் கொண்டு சுமந்து போனதுண்டு வாழ்வின் வழிகளில்.

யோசித்து செல்லுங்கள் சுவாசிக்க சுவாரசியமான உலகம் அங்கு உண்டு என்பதை எண்ணி......!!!

பொத்துவில் அஜ்மல்கான் ​வௌியீடு: வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்