வாழ்க்கைப் பாடங்கள்!

காத்திருப்பில் பூத்திருக்கும் விலாசமிட்ட பூமுகங்கள் எதிர் பார்த்திருப்பில் ஏங்கி நிற்கும் அன்பு நெஞ்சங்கள்

புன்முறுவலில் பூத்திருக்கும் பூவிரியும் புன்சிரிப்புக்கள் புன்சிரிப்பில் வார்த்தைகள் ஆயிரம் வீசும் கதிர் வீச்சுக்கள்

வார்த்தைகளும் வாழ்த்தும் வரையறைகளும் வாழ்த்தும் வாழ்த்துக்கள் பொழியும் நல்லெண்ண நல்லுள்ளங்கள்

வாழவும் கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடங்கள்! வாழ இடமளித்தே வாழ்ந்து காட்டுவோம்!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா பஸ்யால அதிபர் -SLPS -2 மே.மா/களு/சீனன்கோட்டை ஆரம்ப பாடசாலை பேருவளை

கருத்துகள்