விஷப் பரீட்சை எதற்கு?

பேசும் பேச்சிலும் விஷம் சிரிக்கும் சிரிப்பிலும் விஷம் கைலாகிலும் தோய்ந்த விஷம் கட்டியனைப்பிலும் உராய்ந்த விஷம்

பசையாய் விஷம் ஆங்காங்கே விசையாய் ஒட்டிக் கொள்கிறது சுவையாய் ஓட்டியும் கொல்கிறது!

சீறும் நாகப் பாம்பிலும் விஷம் சிரிக்கும் மனிதப் பதரிலும் விஷம் எதில் எதிலெல்லாமோ விஷம்

விஷம் இறக்கும் கற்களும் உண்டு விஷம் எடுக்கும் கரங்களும் உண்டு உள்ளதை உள்ளபடி சொன்னால் வேறு விணையேயில்லை!

விஷப் பரீட்சை எதற்கு? வேண்டாம் வீண் விளையாட்டு வேண்டும் வாழ்வு என்று நன்றே கூறித் தன் தலையாட்டு!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா பஸ்யால அதிபர் -SLPS -2 மே.மா/களு/சீனன்கோட்டை ஆரம்ப பாடசாலை பேருவளை

கருத்துகள்