இல்லற வாழ்வில் இனியவள் புகுந்தாள் கண்ணிமைகளில் நாளும் கனவுகளைச் சுமந்தாள்
துப்பாக்கித் துளைகள் துப்பிய எச்சத்துள் காலனால் கணவனும் களவெடுக்கப் பட்டான்
மஞ்சள் இழந்த மங்கையும் மிஞ்சிவிட்ட வஞ்சகரின் நஞ்சான சொற்களினால் நெஞ்செரிந்து வெந்தாள்
வீணர்களின் விளக்கமதும் விடிவைக்காண வித்திடுமோ? பேதையிவளின் வேதனைகளும் வெண்பனியாய்த்தான் விலகிடுமோ?
பெண்ணாகப் பிறந்தவள் புண்ணாகிப் புழுவாகி நெளிகின்ற போதிலும் நெஞ்சிறக்கம் கொள்ளவில்லை ச்சீ...சீ...
பெண்குலமே வேசியென பேசித் தூற்றும் மோசமான பாதகரின் பேதலிக்கும் கள்ளமனம் பேச்சிழந்து போகட்டும்
கருத்துகள்
கருத்துரையிடுக